ஹெல்தியாக எப்படி கொழுப்பைக் குறைப்பது?

  திஷா   | Last Modified : 18 Jul, 2018 02:47 am
healthy-way-to-burn-fat

உடல் எடை அதிகரிப்புகு முக்கியக் காரணம் கெட்ட கொழுப்புகள் அதிகளவில் உடலில் தங்குவது தான். கொழுப்பு குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என பலரும் முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த முயற்சி தோல்வியில் முடிவது தான் பெருஞ் சோதனை. சரி ஆரோக்கியமான முறையில் எப்படி கொழுப்பைக் குறைக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம். 


நிறைய பேர் அதிக புரதச் சத்து மற்றும் கொழுப்பு உணவுகளை மட்டும் சாப்பிடும் டயட் முறையை பின்பற்றுகிறார்கள். இதனால் உங்களது தசைகள் பாதிக்கப் படுமே ஒழிய, உடலில் உள்ள கொழுப்பு குறையாது. 

உணவை தவிர்த்தலோ, போதுமான அளவு கலோரியை உட்கொள்ளாமல் இருப்பதோ, பட்டினி கிடப்பதோ ஒரு போதும் எடையைக் குறைக்காது. பதிலாக ஒரு நாளைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய முறை உணவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் கொழுப்பு உடனடியாக எரிக்கப் படும். 

பதப்படுத்தப் பட்ட உணவுகளை முற்றிலும் தவிருங்கள். 

மாமிசங்களில் மட்டும் தான் கொழுப்பு இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளிலும் உடலுக்குத் தேவையான கொழுப்பு இருக்கிறது. இவைகள் முழுமையான உணர்வைக் கொடுத்து, பசியைக் குறைக்கும். 

ஆரோக்கியமான எண்ணெயில் ஓமேகா 3 கொழுப்புகள் நிறைந்திருக்கும். இதனால் உடலில் உள்ள எல்.டி.எல் கொழுப்பு குறையும். மீன் மற்றும் நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த ஒமேகா 3 கொழுப்பைப் பெற முடியும். 

உணவுமுறை எவ்வளவு முக்கியமோ அதே அளவு உடற்பயிற்சியும் எடை குறைய முக்கியமான ஒன்று. உடல் ஆரோக்கியமான உணவுகளால் நிறைந்திருக்கும்போது, ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை எரித்து எனர்ஜிக்குப் பயன்படுத்திக் கொள்ளும். 

3 வேளைக்கு பதிலாக 5 வேளையாக சாப்பிடுங்கள். அதாவது 3 முறை உணவு, 2 முறை ஹெல்தியான ஸ்நாக்ஸ். இதனால் உங்களது மெட்டபாலிசம் அதிகரிக்கும்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close