என்றும் இளமையுடன் ஜொலிக்க சிம்பிளான டயட்!

  PADMA PRIYA   | Last Modified : 17 Mar, 2018 06:01 pm

என்றும் பதினாறு இளமையுடன் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவே உள்ளது. முகம்தான் ஒருவரை எடுத்துக்காட்டும் அடையாளமாக விளங்குகிறது. இதனை அனைவருக்கும் அழகாக பராமரிக்க ஆசை. ஆனால் அதற்கான நேரமும் மெனக்கேடுவதும் தான் அனைவருக்கும் பிரிச்சினை. முகம் அழகாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு பலரும் ஆன்டி ஏஜிங் க்ரீம்கள், சில வகையான பார்லர் சர்ஜரிகள் போன்றவை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் நாம் உண்னும் உணவை முறையாகவும், சரியானதாகவும் எடுத்துக் கொண்டாலே இளமை என்பது நமக்கு சொந்தமாக இருக்கும். இதோ அவ்வகையிலான சிம்பிளான உணவு பட்டியல்கள்!

தக்காளி: ஏஜிங் பிரச்சனையை போக்குவதில் தக்காளி பெரும் பங்காற்றுகிறது. நுரையீரல் புற்றுநோய் வராமலும் இது தடுக்கும். தக்காளியை வேக வைத்து உணவில் சேர்த்தால் அதில் இருக்கும் லைகோபைன் முகத்திற்கு பொலிவான தோற்றத்தை தருகிறது. பச்சையாக எடுத்துக்கொள்வது மேலும் நல்லது.

நார்ச்சத்து உணவுகள்: இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளும் உணவுகளில் நார்ச்சத்து உணவுகள் முதலிடம் வகிக்கின்றன. முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை உடல் நலத்தை மேம்படுத்துகின்றன. உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால், இளமை தோற்றம் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்.

நட்ஸ்: நட்ஸில் இருக்கும் நார்ச்சத்து, புரோட்டீன், ஒமேகா-3, அன்சாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை சரும செல்கள் ஆரோக்கியமாக்கி, சரும பிரச்சனைகள் வருவதை தடுக்கப்படுவதோடு, நீண்ட நாட்கள் இளமையுடனும் இருக்கவும் உதவுகின்றன.

தண்ணீர்: உடல் அழகு மற்றும் இளமை தோற்றத்திற்கு தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. எவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்கின்றோமா, அந்த அளவிற்கு சரும செல்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும், இளமை தக்க வைக்கப்படும். உடல் சூடு குறைந்து முகத்தில் தோன்றும் சிறு சிறு பருக்கள் அறவே நீங்கும்.

ரெட் ஒயின்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே விஷம் என்பார்கள். அது போல் தான் ரெட் ஒயினும். தினமும்1 ஸ்பூன் குடிதால் ரெட் ஒயின் இளமை, அழகு, கவர்ச்சியான தோற்றம் என அனைத்தையும் தரும். இளமையாக இருக்க நினைத்தால், ரெட் ஒயினை அளவாக குடிக்கலாம். ஆரோக்கியமான சமச்சீரான உணவு மற்றும் , உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இவை எல்லாவற்றையும் தாண்டி தூக்கம் என்பதும் என்றுமே, நமது முகத்தோற்றத்தை இளமையாக வைத்திருக்க உதவும் என்பதை என்றும் நினைவில்கொள்ளவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close