நீர்க்கடுப்பை உடைக்கும் பானகம்

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 07:36 am
panakkam-drink-benefits

அரோக்கிய பானம் என்றால் அதில் குறிப்பாக சொல்லப்படுவது பானகமாகும்.  பொதுவாக இந்த பானகம் கோடைக்காலங்களில் வரும் திருவிழாக்களின் போது அதிகமாக காண முடியும்.  

இது  'டிஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பினால்' ஏற்படும் பிரச்சனைகளை கலைய வல்லது.  பானகம், பானக்கம் என்ற பெயர்களால் இந்த பானம் அழைக்கப்படுகிறது.  எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை எனப் பல வகையாக   உள்ள பானகங்களில், எலுமிச்சை,புளி கலந்த பானகம்தான் மக்களிடையே பிரபலமாக உள்ளது. 

 இவை நம் உடல் உறுப்புகளில் தேங்கிய நுண்கழிவுகளை வெளியேற்றி,  ஜீரண சக்தி பெருக்கும் வல்லமை கொண்ட  பானங்களாகும்.  மேலும் கோடை காலங்களில் ஏற்படும் நோய்களான நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்கட்டு, சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சல் தன்மை போன்றவற்றை விரைவில் சரி செய்யும் ஆற்றல் கொண்டது.  

மேலும் தொண்டை கரகரப்பு, சளி, உடல் சோர்வை விரட்டும் அரு மருந்தாகவும் செயல்படுகிறது.  இந்த பானகம், சிறுபிள்ளைகள் முதல் முதியவர்கள்  வரை அனைவரும் பருக ஏற்றது.  சரி பானகத்தின் வகைகளை பற்றி பார்க்கலாம்....

 பனை வெல்லம் அல்லது குண்டு வெல்லம்,  ஏலக்காய், உணவு கற்பூரம், கிராம்பு, மிளகு, எலுமிச்சை, புளி, தயிர்  போன்றவற்றை  கலந்து செய்வது பானகம் என்று அழைக்கப்படுகிறது. 

 ஜீரண தன்மையை தூண்டக்கூடிய சக்தி வாய்ந்த பானத்தை, குளிர்ந்த நீரில் நாட்டு சர்க்கரை  கலந்து ஏலக்காய், கற்பூரம், கிராம்பு, மிளகு கலந்து செய்யப்படுகிறது.

உடலுக்கு நல்ல வலுவூட்டக் கூடிய பானகம் தாயாரிக்க நீரில் மாங்காயை வேகவைத்து, பின்னர் நன்றாக பிசைந்து அதனை பானத்துடன் கலந்து பருக வேண்டும்.
 
வாதத்தை பெருக்கி ஜீரணத்தை தூண்டும் பானகத்தை தயாரிக்க பானத்துடன்  ஊரவைத்த  புளிச்சாற்றை கலந்து பருக வேண்டும் 

பித்தத்தை தூண்டி ஜீரணசக்தியை அதிகப்படுத்த  பானகத்துடன் மல்லிகை இலையை அரைத்து அதன் சாற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.

பானகம் தயாரிக்கும் முறை:

புளி              -சிறு எலுமிச்சையளவு
வெல்லம்    -  சுவைக்கேறப‌
சுக்குப்பொடி  - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி- 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன் அல்லது வரமிளகாய்-  இரண்டு
தண்ணீர்          - 2கப்

செய்முறை :
புளியை, தண்ணீரில் ஊறவைத்து, நன்றாக கரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும், அதனுடம் வெல்லம், சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி மற்றும்  மிளகு தூள் அல்லது வரமிள‌காயை கிள்ளிப்போட வேண்டும்.  பின்னர் சிறிது நேரம் மண் பானையில் வைத்து பருகினால், கோடை காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்க முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close