மாரடைப்பை தடுக்கும் வெள்ளை சோள மாவு தோசை!

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2019 09:13 pm
eat-jowar-dosha-away-from-heart-attack

இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம், நம் ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளே என பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்ம உண்ணும் உணவு முழுவதும் செரித்து விட்டால், நமக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. 

மாறாக முதலில் ஏற்படும் செரிமான கோளாறு தான் அத்தனை வியாதிகளுக்கும் அஸ்திவாரமே. இதை ஆரம்பத்திலேயே சரி செய்து விட்டால், கொழுப்புகள் சேர்வதை தடுப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பின் மூலம் ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவை நம்மை அண்டாமல் தவிர்க்கலாம். 

வரும் முன் காப்போம் என்பதை நினைவு கூர்ந்து, உணவே மருந்து என்பதை செயல்படுத்தி, நம் உடலை பிணிகளில் இருந்து பாதுகாப்போம். அதற்கான உணவு வகைகளை தொடந்து பார்ப்போம். 

செரிமானத்தை அதிகரித்து, கொழுப்புகளை கரைத்து, ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்தி, கால்சியம், இரும்பு சத்து, புரதம் ஆகியவற்றை அள்ளி தரும் அருமருந்தாம் வெள்ளை சோளத்தில், தோசை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: பச்சரிசி, வெள்ளை சோளம், உளுந்து, வெந்தயம். 

செய்முறை: மூன்று பங்கு வெள்ளை சோளம், ஒரு பங்கு பச்சரிசியுடன் சேர்த்து அதில் நீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பத்திரத்தில், ஒரு பங்கு உளுந்தம் பருப்புடன், சிறிதளவு  வெந்தயம் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்கவும். 

4 மணி நேரத்திற்குப் பின் இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து, தேவையான அளவு உப்பு போட்டு புளிக்கும் வரை காத்திருக்கவும். பின் அதை வழக்கமான முறையில் தோசையாக வார்த்து எடுக்கவும். தேங்காய், தக்காளி, வெங்காயம் போன்ற எந்த சட்னியும் தொட்டு சாப்பிடலாம். சைடு டிஷ் உங்கள் இஷ்டம்தான். இதே மாவில் பணியாரமும் கூட செய்து சாப்பிடலாம்.

பலன்: வெள்ளை சோளத்தில் 48 சதவீதம் நார் சத்து இருப்பதால், இது சிறந்த கொழுப்பு கரைப்பானாக செயல்படுகிறது. இதில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள், எலும்பை உறுதி படுத்துகின்றன. செரிமான மண்டலத்தை தூண்டி, உணவின் சத்துக்களை உடல் கிரகிக்க வைப்பதால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 

இதனால், வெள்ளை சோளத்தை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதால், மாரடைப்பு, ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம். 

அதுமட்டுமின்றி, ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்வதால் வயது முதிர்ந்த தோற்றத்தை தடுத்து, இளமையான தோற்றம் பெற வழிவகை செய்கிறது. புற்றுநோய் காரணிகளையும் வெள்ளை சோளம் தடுத்து நிறுத்துவதால் சிறந்த நோய் தடுப்பு மருந்தாகவும், இந்த உணவு செயலாற்றுகிறது. 

newstm.in


 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close