எலும்புகளை பலமாக்கும் கம்பு புட்டு

  சாரா   | Last Modified : 23 Dec, 2019 03:50 pm
kambu-puttu

தேவையான பொருட்கள்

கம்பு மாவு -2கப்
வெல்லம் - 1 1/2 கப்
தேங்காய்துருவல் -1கப்
முந்திரிப் பருப்பு -5
நெய் -3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1டீஸ்பூன்

செய்முறை

கம்பை நன்றாக கழுவி கொள்ளுங்கள். நன்றாக என்பது குறைந்த பட்சமாக நான்கைந்து முறைகளாவது நன்றாக அலசி, கம்பில் கலந்திருக்கும் கற்களை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவில் கல், மண் தட்டுப்படும். நன்றாக கழுவிக் கொண்ட பிறகு, தண்ணீரை நன்றாக வடித்து விட்டு, நல்ல வெயிலில் ஈரமாக இருக்கும் கம்பு நன்கு மொறுமொறுவென வரும் வரையில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும், சூடான வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, படபடவெனப் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த கம்பை இப்போது நைசான மாவாக மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவில் 2 கப் எடுத்து, சிட்டிகையளவு உப்பை அதனுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து, பிசிறி, ஆவியில் வேக வைக்கவும். கம்பு வேகுவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். அது வேகும் நேரத்தில் வெல்லத்தைத் தட்டி, அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும், இறக்கி அதில் ஏலக்காய் தூள், முந்திரி, தேங்காய் துருவல், நெய் சேர்க்கவும்.

வெந்த புட்டை மணல் மாதிரி உதிர்த்து, அதே சூட்டோடு பாகில் கொட்டி நான்றாக கிளறவும். உதிரி உதிராக வந்ததும் பரிமாறவும். ரொம்ப ருசியாக இருக்கும்.
சிறு தானியங்களை அப்படியே கொடுத்தால், குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். சத்தான சிறு தானியங்களின் இந்த மாதிரி அவர்களுக்கு பிடித்த உணவு வெரைட்டியாக செய்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை இப்படித் தான் ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாற்ற வேண்டும்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close