ஆச்சர்யம்: உப்மாவால் 51 கிலோ எடையைக் குறைத்தவர்..!

  கனிமொழி   | Last Modified : 07 Jun, 2018 04:23 am
unbelievable-this-upma-lover-lost-his-51-kg-in-just-7-months

தற்போதைய மனிதர்களின் மிகப் பெரிய வேண்டுதலே, 'வயிறு முட்ட சாப்பிடனும், ஆனா வெயிட் போட கூடாது' என்பது தான். முன்பெல்லாம் இதில் பெண்கள் மட்டும் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள், ஆனால் இப்போது அவர்களுக்கு போட்டியாக ஆண்களும் களம் இறங்கி விட்டார்கள். டயட், உடற்பயிற்சி என நிறைய மெனக்கெடுகிறார்கள். 

தீபாங்கர் பிரசாத் என்பவர் 7 மாதத்தில் அரை செஞ்சுரி வெயிட்டைக் குறைத்திருக்கிறார். அதுவும் தனது ஃபேவரிட் உணவான உப்மா மூலம். நம்மில் பலருக்கும் இந்த உப்மா தான் அலர்ஜியே, ஆனால் இதை படித்த பிறகு இனி எல்லோரும் உப்மாவை ஃபேவரிட் லிஸ்டில் இணைத்து விடுவீர்கள் என நம்புகிறோம். 

சரி வாங்க தீபாங்கரின் டிரான்ஸ்ஃபர்மேஷனைப் பற்றிப் பார்க்கலாம். 
பெயர்           - தீபாங்கர் பிரசாத் 
வயது            - 25 
தொழில்      - பன்னாட்டு நிறுவனம் 
எடை            - 118 கிலோ
குறைத்தது - 51 கிலோ 
நேரம்           - 7 மாதம் 

தூண்டுதலாக இருந்தது? 
என்னுடைய 25 வயதில் 52 வயது தோற்றத்தில் இருந்தேன். அது எனக்கு ஒரு விதமான மன அழுத்ததைக் கொடுத்தது. அதனால் எப்படியாவது எடையைக் குறைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 

காலை உணவு? 
உப்மா அல்லது ரவா இட்லி அல்லது முளைக்கட்டிய பயறுடன் பிரவுன் பிரெட் மற்றும் பீனட் பட்டர் அல்லது ஆம்லெட். இதில் எப்போதும் உப்மா தான் எனக்கு ஃபேவரிட். அது லோ கலோரி உணவும் கூட. 

மதியம்?
முட்டை வெள்ளைக் கரு 8, கொஞ்சம் ஓட்ஸ், பச்சைக் காய்கறிகள் 200 கிராம், தயிர் மற்றும் சாலட். 

இரவு?
வேக வைத்த பருப்பு - 1 கப், முட்டை வெள்ளைக் கரு - 7, சிக்கனுடன் 150 கிராம் காய்கறி. 
 
சீட்டிங் செய்யும் போது?
கட்டாயம் பிரியாணிக்காகவோ அல்லது சாதம் வித் சிக்கனுக்காகவும் தான் டயட்டை சீட் செய்வேன். 

உடற்பயிற்சி ?
தினமும் 25 நிமிட கார்டியோ பயிற்சி, 90 நிமிட எடை குறைப்பு பயிற்சி செய்வேன்.  

மோட்டிவேஷன்?
எப்போதும் கண்ணாடி முன் நின்று கொண்டு என்னை நானே மோட்டிவேட் செய்துக் கொள்வேன். இங்கு நம்மை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும். 

பின்னடைவு? 
எனது 7 வருட காதல் தோல்வியில் முடிந்தது. காரணம் நான் குண்டாக இருக்கிறேன் என்பதால். 

(இப்போ நிச்சயம் அந்தப் பொண்ணு ஃபீல் பண்ணும்)
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close