வாழ்நாள் முழுவதும் வளையாமல், நிமிர்ந்து நடக்க, இதை சாப்பிட்டால் போதும்

  கோமதி   | Last Modified : 31 Dec, 2018 12:52 pm

we-can-stand-erect-at-any-age-by-eating-this

வளரும் குழந்தைகளின் ஆரோக்யத்தைக் காக்கும் முதல் மருத்துவர் அம்மாதான். குழந்தைகள் வளரும் பருவத்திலேயே சத்தான உணவுகளின் ருசியை அவர்களுக்கு உணர்த்திட வேண்டும். அப்போதுதான் வளர வளர வேண்டிய சத்துக்களைப் பெற்று ஆரோக்யமாக இருப்பார்கள். இப்போதுதான்  பெரும்பாலான இல்லத்தரசிகள் ஓர் ஆயுத்தத்தைக்  கையிலெடுத்திருக்கிறார்களே.. காய்களை நறுக்கவே நேரமில்லை.... எப்படி சமைக்க நேரம் இருக்கும் என்று வேகமாக சமைக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை விரும்பி அதே வேகத்திலேயே நோயையும் சம்பாதித்துக்கொள்கிறார்கள். இதில்  யாரையும் குறைபடவும் முடியாது என்பது ஒருபக்கம். சரி நாம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய சத்துமிக்க பொருள்கள் பலவும் எளிமையாக செய்யகூடியவைதான். 

என் பாட்டியோடு  வீதியுலா செல்லும் போதெல்லாம் பார்க்கும் இடங்களில் உள்ள செடிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே வருவார்கள்.  ஏதேனும் அரிதான கீரைவகைகளைக் கண்டுவிட்டால் காண கிடைக்காத பொக்கிஷம் கண்ட முகமலர்ச்சி அவர்களிடம் இருக்கும். இந்தப் பச்சிலையைத்தான் கண்ணு தேடினேன் என்றபடி முள்ளுச்செடிகளைத் தாண்டி  அதைப் பறிப்பார். நமக்குத்தான் பார்க்கும் எல்லாமே  ஏதோ ஒரு செடிதானே... ஒருமுற முடக்கத்தான் கீரையைப் பறித்து வந்தார். அதைப் பற்றி சொல்லும்போது  நானெல்லாம் எப்படி நடக்கிறேன் பார். கை,கால் குத்தல் இல்லாமல் நேராயிருக்கேன்.  ஆனா  நீங்கல்லாம் எங்க வயசுல எப்படி இருப்பீங்களோ என்றார். ஏன் பாட்டி என்றேன். அதான்  ஃப்ஸ்ட் புட்டோ என்னவோ அதெல்லாம் வேஸ்ட் (பாட்டி அந்தக் கால 3 ஆம் வகுப்பு)  என்றபடி முடக்கத்தான் கீரையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.  வயதானால் மனிதனை கை, கால்  மூட்டு ஒரே இடத்தில் முடக்காமல் இருக்கத்தான் இந்தக் கீரையை சமைக்கணும். இதைத் துவையலாக, குழம்பாக செய்யலாம்.  தோசையும் ஊற்றலாம். இன்னிக்கு உனக்கு இதுதான் என்று செய்து தந்தார். ஆரம்பத்தில் பாட்டியின் நச்சரிப்பு தாங்காமல் சாப்பிட்டேன். இன்று எனது விருப்ப உணவாக முடக்கத்தான் தோசை ஆகிவிட்டது.  நகரத்தில் வசித்தாலும்  விழிப்புணர்வு காரணமாக எல்லா இடங்களிலும் முடக்கத்தான் கீரை சகஜமாக கிடைக்கின்றது.

முடக்கத்தான் கீரை தோசை எப்படி செய்வது பார்க்கலாமா?

பச்சரிசி - 1கப்,

இட்லி மாவு -1 கப்

சுத்தம் செய்து நன்றாக அலசிய முடக்கத்தான் கீரை -  4 கப்.

உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு

தேவையெனில் தாளிப்பு சேர்க்கலாம்.

செய்முறை:

 சுத்தம் செய்து அரைமணிநேரம் ஊறவைத்த பச்சரியை மிக்ஸியில் இட்டு இரண்டு சுற்று சுற்றவும். சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையைச் சேர்த்து  இலேசாக தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். அகன்ற பாத்திரத்தில்  இட்லி மாவுடன் அரைத்த முடக்கத்தான் அரிசி மாவைச் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக கலக்கவும். அரைமணிநேரம் கழித்து  நல்லெண்ணெய் அதிகம் ஊற்றி தோசையாக வார்த்தெடுக்கவும். அருமையான க்ரீன் தோசை  தயார்.  இலேசாக கசப்பு சுவை இருக்கும் என்பதால் தொட்டுக்கொள்ள காரச்சட்னி அருமையாக இருக்கும். வெல்லம் வைத்தும் சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால் கசப்பும் தெரியாது.

வாரம் ஒருமுறை முடக்கத்தான் தோசையை செய்து சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் வளையாமல் நிமிர்ந்து நடக்கலாம். சப்பனமிட்டு உட்காரலாம். கைப்பிடியைத் தொடாமல் நடக்கலாம். நமது ஆரோக்யத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டோம். நமக்கு அடுத்த தலைமுறையாவது நோயின்றி ஆரோக்யமாக இருக்கட்டுமே.. என்ன சொல்கிறீர்கள் அம்மாக்களே... 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.