கோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? அவசியம் படிங்க...

  முத்துமாரி   | Last Modified : 07 Jan, 2018 06:16 am


வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நாம் நமது முன்னோர்கள் சொல்லி கொடுத்ததை மறந்து விடுகிறோம்..அவர்கள் கூறிய அனைத்திலும் அறிவியல் இருக்கிறது என்பதை தற்போது அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டு வருகிறோம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்தாலும் மறுபக்கம் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. தற்போதுள்ள கால கட்டத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்து நமது பழக்கவழக்கங்கள் பலவற்றை மாற்றியுள்ளோம். 

அதில் ஒன்று, இரவில் உறங்குவதற்கு கட்டில், பஞ்சு மெத்தை, பஞ்சு தலையணை என உபயோகிக்கிறோம். நமக்கு நோய்கள் அதிகரிக்க அதுவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் நோய்கள் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா..


'பாயில் படு, நோயை விரட்டு'   என்பது பழமொழி.. 

தரையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.. 

* பாயில் கோரைப்பாய், ஈச்சம் பாய், மூங்கில் பாய் என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு மருத்துவ குணம் உடையது. பொதுவாக என்ன பழங்கள் என பார்ப்போம். 

* வழக்கமாக ஒரு பாயை மூன்று ஆண்டுகள் வரை உபயோகிக்கலாம்.

* பாய் உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது. ஆழ்ந்த உறக்கம் வரும்.

* உடல் சோர்வு, மந்தம், ஜுரம் போக்கக்கூடியது.

* கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி வராது. சுகப்பிரசவம் நடக்கவும் அது வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். 

* பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுழுக்கு பிடிக்காது, குழந்தையின் முதுகெலும்பபை சீர்படுத்த உதவும். குழந்தை வேகமாக வளரவும் உதவும்.

* கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பாயில் உறங்கினால் இளம் வயது கூண் முதுகு விழாது.

* பெரும்பாலான முதியோர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதே நல்லது. ஏனென்றால் 60 வயதிற்கு மேல் உடலில் இரத்த ஓட்ட பிரச்சினை இருக்கும். பாயில் சமமாக கால் கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது,

* எனவே கட்டில் உபயோகித்தாலும் அதன் மீது பாய் உபயோகித்தால் உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் ஆரோக்கியம்.. உங்கள் கையில்..

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.