ஒரு சிகரெட் போதும் உங்களை சீரழிக்க! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

  SRK   | Last Modified : 11 Jan, 2018 10:56 am


"ஒரு முறை செஞ்சு பார்க்கலாம். என்ன ஆகிட போகுது" என நினைத்து சிகரெட் பிடிப்பவர்கள் மூன்றில் இரண்டு பேர், புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

சிகரெட் பிடிப்பவர்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஒன்றிணைத்து குயின் மேரி பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், ஆர்வத்தில் சிகரெட் பிடிக்கத் துவங்குபவர்களில் அதிகபட்சமானோர் தினம் சிகரெட் பிடிக்கும் நிலைக்கு செல்வதாக தெரிய வந்துள்ளது. 2,15,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 60.3 சதவீதமானோர் ஒருமுறையாவது சிகரெட் பிடித்துப் பார்க்கலாம் என்று புகைக்கத் தொடங்கியவர்கள் என்பதும், அவர்களில் 68.9 சதவீதமானோர் தினம் சிகரெட் பிடிப்பவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

வெவ்வேறு ஆய்வுகளில் இந்த எண்ணிக்கை சிறிது மாறுபட்டாலும், அவை அனைத்தும் 60.9 சதவிதம் முதல் 76.9 சதவீததிற்குள் வந்து விடுவதாக இந்த ஆராய்ச்சியின் தலைவர் பீட்டர் ஹஜக் தெரிவித்துள்ளார். சமீப காலமாக சிகரெட் பிடித்துப் பார்க்கவே மக்கள் தயங்குவதால், சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக்கிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், "வேப்பிங் எனப்படும் ஈ-சிகரெட் பழக்கமும், மக்களை அடிமையாக்குவதாக கருதப்படுவது தவறு. சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தான் தினம் வேப்பிங் செய்கின்றனர். புதிதாக ஈ-சிகரெட் பிடிப்பவர்களில் வெகு சிலரே, தினம் அதை செய்கின்றனர்" என்றும் பீட்டர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close