வெள்ளை முடியா கவலை வேண்டாம்! இதை ட்ரை பண்ணுங்க

  Sujatha   | Last Modified : 18 Feb, 2018 11:15 am


கைக்கு அலங்காரம் பண்ண மட்டும் இல்லைங்க, உங்க தலையில அசிங்கமா தெரிற வெள்ளை முடிய சரி செய்யவும் மருதாணி யூஸ் பண்ணலாம். பலபேருக்கு இந்த விஷயம் தெரிஞ்சி இருந்தாலும், அத எப்படி? எது கூட ?கலந்து யூஸ் பண்ணுறதுனு தெரியாது. விஷயத்தை தெரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க...

தேவையான பொருட்கள்:

மருதாணி இலை: தேவையான அளவு 

எலுமிச்சை சாறு: 1ஸ்பூன் 

நெல்லி முல்லி பொடி: 2ஸ்பூன் 

தேங்காய் எண்ணெய்: 2 ஸ்பூன்

தயிர்: 1கப்  

செய்முறை:  

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close