கோடை ஸ்பெஷல்: உடல் சூட்டை எளிதாக குறைக்கும் வழிகள்

  Shalini Chandra Sekar   | Last Modified : 11 Apr, 2018 04:31 pm


கோடையில் மட்டுமல்ல மற்ற நேரங்களிலும் உள்ள ஒரு முக்கிய பிரச்னை உடல் சூடு. வேலை அழுத்தம், உணவு, சூழ்நிலை என இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். பொதுவாக நீங்கள் கவனித்திருப்பீர்கள் நம் உடலின் அறிவியல் படி, உடல் சூடு உடையவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப் படுபவர்களாக இருப்பாரகள். அவர்களால் ஒரு விஷயத்தை கூலாக ஹேண்டில் செய்வது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். அதற்கு முதலின் நமது உடலை குளிர்ச்சியாக்கினாலே போதும், மனதும் செயல்பாடுகளும் தானாக மாறும். சாதாரணமாகவே உடல் சூடு கொண்டவர்களுக்கு, இந்த கோடை ஒரு பெருங்கொடுமை தான். ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் இதனை எளிதில் கடந்துவிடலாம். 

0 இந்த சமயத்தில் தண்ணீர் வரம். உடலை வறண்டுப் போக விடாமல் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு தம்ளர் நீராவது குடிப்பது அவசியம். அதோடு காலை மாலை இரண்டு வேளையும் குளிர்ந்த நீரால் குளிக்கவும். 


0 தினமும் இளநீர் குடிப்பது நல்லது. இதிலுள்ள நியூட்ரியன்ட்ஸ் உங்களுக்கு எனர்ஜி அளிக்கும். 

0 தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது உங்கள் உடல் சூட்டை தணித்து, உடல் சூடு சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்கும். அதிலும் எலுமிச்சையுடன் இயற்கை இனிப்பான தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. இதனை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம். 

0 சந்தனப்பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து உங்கள் நெற்றிப் பகுதியில் அப்ளை செய்து 15-20 நிமிடம் கழித்துக் கழுவலாம். 

0 ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிது புதினா இலைகளைப் போட்டு, கொதிக்க வைத்து, ஆறியதும் அதனுடன் தேன் சேர்த்துக் குடிக்கலாம். 

0 கோடையின் வரப்பிரசாதமே தர்பூசணி தான். இது உடல் சூட்டைக் குறைப்பதோடு, உடல் கழிவுகளையும் வெளியேற்றும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.