மதுவை இளைஞர்கள் ஏன் நாடுகிறார்கள் தெரியுமா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Feb, 2018 09:41 pm


இன்றைய இளசுகளுக்கு மது அருந்துதல் நாகரிகமாக மாறிவிட்டது. மது அருந்தவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் மதிக்கமாட்டார்கள் என நினைத்துக்கொண்டு மதுவிற்கு அடிமையாகின்றனர்.

இளைஞர்கள் மது அருந்துவதற்கு என்ன தான் காரணம் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், பொதுவாக இளைஞர்களே அதிக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக என்ன தான் காரணம் என ஆராய்ந்தபோது, 4 வகையான காரணங்களை தெளிவு படுத்துகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

*முதல் காரணம் சமூகமயமாதல் அதாவது ஓய்வு நேரத்தை ஜாலியாக கழிப்பதற்காக மதுவை நாடுகின்றனர். பின்னர் அந்த பழக்கமே நிறுத்தமுடியாத தொடர்கதையாக மாறுவதாக கண்டறியபட்டுள்ளது.

அடுத்த காரணம், தவறு செய்துவிட்டு, அதை, தானே செய்தேன் என ஒத்துக்கொள்வதற்கும் குடிக்க ஆரம்பிக்கின்றார்களாம். உண்மைகளை சொல்வதற்கு துணிவு வராதபோது துணிவை வரவழைக்க மது அருந்துவதை பழக்கமாக்கி கொள்கின்றனர் இளைஞர்கள். 

அதேபோன்று தம்மை சமூகத்தில் பெரிய ஆளாகக்காட்டிக் கொண்டு ’கெத்து’ காண்பிப்பதற்காகவும் சில இளைஞர்கள் மதுவை தேடி செல்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.  

சில பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் சமாளிக்க முடியாமல் கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதும் மதுவிற்கு அடிமையாவதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close