யெல்லோ ஜெர்சி..யெல்லோ ஆர்மி.. இப்போ யெல்லோ மில்க்!!

  Suja   | Last Modified : 20 Apr, 2018 06:22 am


மஞ்சள் போட்டு பாலை குடிமா, உடலுக்கு  நல்லதுன்னு  நம்ம வீட்டு பாட்டிங்க சொன்னது நம்ம காதுல விழுந்திருக்கும் ஆனா நாம கேட்டும் கேக்காத மாதிரி  கண்டுக்காம அந்த இடத்தை காலி பண்ணிடுவோம்...   கொஞ்சம் அவங்க பேச்ச கேட்டு இருந்தா இன்னைக்கு இருக்குற தலைமுறையினருக்கு வர கூடிய சில கொடிய நோய்கள் வரமால் தடுத்திருக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்குறதால கொடிய நோய்களான கேன்சர், குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறதாம். அது மட்டும் இல்லைங்க உலகப் பேரழகி கிளியோபாட்ரா மஞ்சள் கலந்த பாலில் குளித்ததால்தான் பளபளப்பாக இருந்ததா ஒரு செய்தி. 

இப்போ எதுக்கு மஞ்சள் கலந்த பால் பத்தி இவளோ விளம்பரம்னு தோணுமே, காரணம் இருக்கு. நம்ம ஊரு  பாரம்பரியமான இந்த விஷயத்தை சத்தமே இல்லாம, செஞ்சிட்டு இருக்காங்க வெளிநாட்டுக் காரங்க. லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்த மஞ்சள் பால் இப்போ பயங்கர ஃபேமஸ். அங்க இந்த பாலுக்கு என்ன பேரு தெரியுமா? கோல்டன் மில்க் டர்மிரிக் லேட்டீ (Golden Milk Turmeric Latte). உடல் ஆரோக்கியம் அடைய இந்த பாலை குடிங்க அப்படிங்குற விளம்பரத்தோட இது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. 

அந்த ஊருகளுல  இந்த மஞ்சள் பாலை எப்படி பண்ணுறாங்கனு தெரிஞ்சிக்கலாமா?
   
இளம் சூடான பாலில் மஞ்சள்,ஏலக்காய், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் காய்ச்ச வேண்டும். பின்னர் அதில் சிட்டிகை அளவு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால்  டர்மிரிக் லேட்டீ ரெடி. 
இவ்வளவு ஈஸியான, ஆரோக்கியமான இந்த பாலை ஸ்டார் பக்ஸ் போன்ற கடைகளில் பல நூறுகளுக்கு விக்குறாங்க. நம்ம வீட்டு பாட்டி சொல்லுறத கண்டுக்காத நாம இப்போ ஸ்டைலுக்காக அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்குக்கிறோம்  எது எப்படியோ ஆரோக்கியமான உணவ இப்படியாவது சாப்பிடுங்களேன். (வீட்லயே இத ரெடி பண்ணி குடிச்சா செலவு மிச்சம்).

சரி, இத அதிகம் குடிக்கலாமா? 

ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் அளவு தான் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்தால், சிலருக்கு உடல் உஷ்ணமாகி  வயிற்றுப்போக்கு, தலைவலி, ஏப்பம், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும். 
ஒரு முறை இந்தப் பாலை குடித்ததும், உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டால் உடனே குடிப்பதை நிறுத்துவது நல்லது. சிலருக்கு இது அலர்ஜி ஏற்படுத்தும். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதை நினைவில்கொண்டு அளவோடு குடிப்பது உடலுக்கு நல்லது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.