• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

நெய்யால் 40 கிலோ உடல் எடையைக் குறைத்தவர்

  டேவிட்   | Last Modified : 11 May, 2018 11:38 pm


நெய் என்றாலே உடல் எடையை அதிகரிக்கும் என்ற எண்ணம் தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அந்த எண்ணத்தை மாற்றி தனது உடல் எடையில் 40 கிலோ குறைத்திருக்கிறார் குர்கானைச் சேர்ந்த ஹேமந்த் ராவ் என்ற 29 வயது இளைஞர். 

முதன் முறை டிரெக்கிங் செல்லும் போது தான் எவ்வளவு அன் ஹெல்தியாகவும், அன்ஃபிட்டாகவும் இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறார் ஹேமந்த். கூடவே தனக்கு சரியான உடைகள் கிடைக்காமலும் பல்வேறு உடல் உபாதைகளாலும் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார். அந்த நிமிடம் தான் எப்படியாவது எடையைக் குறைக்க வேண்டுமென ஹேமந்துக்கு ஒரு ஸ்பார்க் உண்டானது. அவரது கடின உழைப்பினால் இன்று 40 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். 

பிஸினஸ் மேனாக இருக்கும் ஹேமந்த் ஒரு வருடத்தில் 120-லிருந்து தனது எடையை 80-ஆகக் குறைத்திருக்கிறார். 

அவர் கடைப்பிடித்த டயட் என்ன தெரியுமா? 

காலையில் பிளாக் டீ, பிறகு ஒர்க் அவுட். முடிந்ததும் நெய் சேர்த்து செய்யப்பட்ட 4 அல்லது 5 முட்டை ஆம்லெட். கொஞ்சம் காய்கறி

மதியம் நெய்யில் வெந்த 100-200 கிராம் பனீர், கொஞ்சம் காய்கறிகள்.

இரவு நெய்யில் செய்த சிக்கன் பிரியாணி. ஆனால் ஒவ்வொரு முறையும் 1 ஸ்பூன் நெய் தான் சேர்த்துக் கொள்வாராம். 

இவைகளுடன் வாரத்திற்கு 6 நாட்கள் ஒர்க் அவுட் செய்வாராம். டயட்டையும் ஒர்க் அவுட்டையும் ஏமாற்றாமல் தொடர்ந்து ஒரு வருடம் செய்து வந்த ஹேமந்துக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close