உங்களுடையது ஆய்லி ஸ்கின்னா? அப்போ மிஸ் பண்ணாம படிங்க...

  கனிமொழி   | Last Modified : 15 May, 2018 12:22 am


பியூட்டி பிரச்னைகளில் மிக முக்கியமானது முகத்தில் எண்ணெய் சுரப்பது. எவ்வளவு புத்துணர்வுடன் இருந்தாலும் முகத்தில் வழியும் எண்ணெய் நம்மை மிகவும் 'டல்' திவ்யாவாக காட்டும். அதோடு முகப்பருக்கள் அதனால் உண்டாகும் தழும்புகள் என பிரச்னை போய்க்கொண்டே இருக்கும். அதுவும் இந்த சம்மர் நேரத்தில் சொல்லவே வேண்டாம். அந்த தொல்லை தரும் எண்ணெயை எப்படி குறைக்கலாம் எனப் பார்ப்போம்... 

மிசெல்லர் வாட்டர் டோனராகவும், சருமத்தில் அதிக எண்ணெய் பசையைக் குறைக்கவும் பயன்படுகிறது. 

ப்ளோட்டிங் ஷீட்டில் உள்ள கிளைக்கோலில் ஆசிட், எண்ணெயைக் குறைக்க உதவுகிறது. ஒருநாளைக்கு இரண்டு ஷீட்டுகள் வீதமோ அல்லது எப்போதாவதோ இதனைப் பயன்படுத்தலாம். 

களிமண் முகத்தில் உள்ள எண்ணெயை நீக்க சிறந்த பொருள், 'மட் தெராபி' என்பது பியூட்டியில் இன்று முக்கியமான சிகிச்சையாகிவிட்டது. அதனால் வாரம் ஒருமுறை சுத்தமான களி மண்ணை முகத்திற்கு பேக்காகப் போடலாம். 

அதிகளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவை தவிர்த்து ஆன்டி ஆக்ஸிடென்ட் & ஒமேகா 3 கொழுப்புகள் உள்ள உணவை அதிகம் எடுத்துக் கொள்ளவும். 

எல்லாவற்றிற்கும் மேல் சிறந்த தோல் நிபுணரை சந்தித்து, உங்கள் சருமத்திற்கு சரியான தீர்வைப் பெறுங்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close