தேமல் பிரச்னையா? இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...

  சுஜாதா   | Last Modified : 13 Jun, 2018 03:10 pm
natural-remedy-for-skin-mosaic

சருமத்தில் ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் தான் இந்த தேமல்.  இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன. தேமல் வர சுத்தமாக இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், 90% தேமல் வர காரணம் மார்க்கெட்டில் வரும் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை உடனே வாங்கி பயன்படுத்துவது தான் முக்கிய காரணம். இப்படி தேமல் பிரச்னை உள்ளவர்களுக்கு நாட்டு வைத்திய முறைப்படி எப்படி சரி செய்வது என்பதனை பார்ப்போம்...

*   கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.
*  முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
*  மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை தேமல் உள்ள பகுதிகளில் தேய்த்தால் தேமல் மறையும்.
*   வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.
*  மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.
*  துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close