பச்சை மிளகாயை எப்படி பாதுகாப்பது?

  திஷா   | Last Modified : 09 Jul, 2018 05:01 pm
how-to-preserve-green-chillies

நிறைய பச்சை மிளகாய்களை வாங்கி விட்டு அதை சரியான நேரத்திற்குள் பயன்படுத்த முடியவில்லை என்றால் அப்படியே வீணாகிவிடும். கவலைப் படாதீர்கள் எளிய வழிகள் மூலம் பச்சை மிளகாய்களை பாதுகாக்கலாம். 

ஜிப்-லாக் பை
நீண்ட நாட்களுக்கு பச்சை மிளகாய் பச்சையாகவே இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் அதன் காம்பு பகுதியை நீக்கிவிட்டு, ஜிப்-லாக் பைகளில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இதனால், பச்சை மிளகாய் நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். 

காற்று பு காத ஜாடி
வீட்டில் பச்சை மிளகாய் நிறைய இருக்கிறது ஆனால் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை உங்களுக்கு வந்தால் கவலையே வேண்டாம்.  
பச்சை மிளகாயின் காம்பு பகுதிகளை நீக்கிவிட்டு, சுத்தமான துணியில் சுற்றி காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். இப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் 20-25 நாட்களுக்கு பச்சை மிளகாய் அப்படியே இருக்கும். 

அலுமினிய ம் ஃபாயில்
இன்னும் நீண்ட நாட்கள் பச்சை மிளகாயை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் அலுமினியம் ஃபாயிலை பயன்படுத்தலாம். ஒரு தட்டில் பச்சை மிளகாய்களை வைத்து, அதன் மீது அலுமினியம் ஃபாயிலை வைத்து மூடவும். பிறகு அந்தத் தட்டை குளிர்சாதன பெட்டியின் ஃப்ரீசரில் 6 முதல் 7 மணி நேரம் வைத்து விடவும். அதன் பின்னர் பச்சை மிளகாய்களை காற்று புகாத டப்பாவில் போட்டு மீண்டும் குளிர்சாதன பெட்டியில் (ஃப்ரீஸரில் அல்ல) வைத்து விடவும். இதனால் 2 மாதங்கள் வரை பச்சை மிளகாய்கள் பச்சையாகவே இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close