வாய்ப்புண்ணுக்கு அத்திக்காய்க்கும் சம்மந்தம் இருக்கா?

  சுஜாதா   | Last Modified : 20 Jul, 2018 09:47 am

mouth-ulcer-treatment

தற்போதைய அல்ட்ரா மாடர்ன் உலகில் பலரும் செய்யும் தவறு தேவையான அளவு நீர் குடிக்காமல் இருத்தல், ஜங்க் ஃ புட்ஸ், நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, மேலும் அளவுக்கு அதிகமான குளிர்பானங்கள்  குடித்தல், மேலும் நாம் சாப்பிடும் உணவுகளிலும் ரசாயன கலப்படம். இதன் வெளிப்பாடாக வாயிலும் புண்கள் உருவாகி சாப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  

இப்படி வாய்ப்புண் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், அத்திக்காய் பச்சடி சாப்பிட்டால் இதனை சரி செய்ய முடியும். 

அத்திக்காய் பச்சடி செய்முறை: 
பிஞ்சு அத்திக்காயை உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க விடவும், அத்திக்காய் வெந்தவுடன் தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், சீரகம் சேர்த்து அரைத்த கலவையை அதில் சேர்க்கவும், இதனுடன் சிறிது தயிர் சேர்த்தால் அத்திக்காய் பச்சடி தயார்.

இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண், கன்னக்குழி புண்கள் சரியாகும். இதேபோன்று அத்திக்காய் இலைகளை தேநீராக்கி வாய் கொப்பளித்தால் வாயில் உள்ள கிருமிகள் வெளியேறி பற்கள் பலமாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close