கருவளையமா... டோன்ட் வொர்ரி - அதுக்கு வீட்லயே தீர்வு இருக்கு

  திஷா   | Last Modified : 24 Jul, 2018 04:21 am
eye-mask-for-dark-circles

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் தூங்குவது மிகவும் குறைந்து விட்டது. இதனால் முக்கியமாக பாதிக்கப் படுவது கண். கணினி, மொபைல் ஃபோன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையம் உருவாகிறது. போதுமான ஓய்வு கண்களுக்குத் தேவை, கூடவே சில வீட்டு வைத்தியங்களை செய்தால் உங்கள் கண் எப்போதும் முத்து போல் பிரகாசிக்கும். 


1. தேங்காய் எண்ணெய் 

அழகுக்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த பொருள். இது கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மற்றும் கண் வீக்கத்தை அகற்றும். கண்களுக்கு கீழ் ஒரு சில துளிகள் தேங்காய் எண்ணெய் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.. ஒவ்வொரு நாளும் இதை செய்ய உடனே வித்தியாசத்தை உணரலாம். 

2. பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கப் பயன்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெய்யுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்யலாம். 

3. ரோஸ் வாட்டர்  

சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும் .

4. பால் மற்றும் பேக்கிங் சோடா 

பால் சோர்வுற்ற கண்களுக்கு  ஒரு வரம். 4 தேக்கரண்டி பால் மற்றும்  2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த கலவையை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

5. கிரீன் டீ

பச்சை தேயிலை, கறுப்பு தேயிலை மற்றும் பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும். 

6. வெள்ளரிக்காய்

இது பெரும்பாலும் கண்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருள். இது உங்கள் கண்களுக்கு புத்துயிர் மற்றும் புதிய தோற்றத்தைக் கொடுக்கும். வெள்ளரிக்காயைப் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பிறகு அந்த சாறை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close