நீங்கள் பனீர் பிரியரா? உஷார் - அதிர்ச்சித் தகவல்

  Shalini   | Last Modified : 30 Aug, 2018 04:17 am

shocking-paneer-made-with-sulphuric-acid

நவீனம் என்ற பெயரில் பல விஷயங்களில் அந்தக் காலத்திலிருந்து பின் தங்கியிருக்கிறோம் நாம். அதில் குறிப்பாக ஒன்று உணவு. அரிசி, சோளம், ராகி, வரகு என வீட்டில் இருந்த அத்தனையும் நமக்கு சத்துக்களை அள்ளி அள்ளிக் கொடுத்தன. இன்று அந்த இடத்தை மைதாவும், மற்ற கலப்பட பொருட்களும் அடைத்துக் கொண்டு விட்டன. 

ஒருபுறம் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பழங்கள், காய்கறிகளை சாப்பிடுகிறோம். மறுபுறம் சிக்கனில் ஹார்மோன் ஊசியும், மீனில் ஃபார்மாலினும் நம்மை ஆரோக்கிய உணவை நோக்கி ஓட விடுகின்றன. இந்நிலையில் அடுத்து வரும் ஒரு விஷயம் உங்களை மேலும் அதிச்சிக்குள்ளாக்கலாம். பனீரில் கலப்படம், அதுவும் சாதாரண கலப்படம் இல்லை. சல்ஃப்யூரிக் ஆசிட் கலப்படம். 

மொகாலியை அடுத்த பல்லோமஜ்ரா என்ற கிராமத்தில் உள்ள பனீர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று, டிடெர்ஜெண்ட் மற்றும் யூரியாவால் பனீரை தயாரித்து கடைசியில் சல்ஃப்யூரிக் ஆசிட்டில் ப்ராஸஸ் செய்து வந்திருக்கிறது. சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வந்த அந்தத் தொழிற்சாலை சந்தேகத்தை வரவைக்க, ஹெல்த் டிபார்ட்மெண்ட், காவல்துறை ஆகியோருடன் பால் பண்ணை சங்கமும் இணைந்து ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.  

அதில் 2060 கிலோ கலப்பட பனீர், 120 லிட்டர் சல்ஃப்யூரிக் ஆசிட், தலா 25 கிலோ எடையுள்ள 135 மூட்டை பால் பவுடர், 85 கிலோ வெண்ணெய் ஆகியப் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இதுப்பற்றி பஞ்சாப் மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையாளர், கே.எஸ்.பன்னு, "அந்தத் தொழிற்சாலை போலியான பனீரை தயாரித்து வந்திருக்கிறது. அதனால் அங்குள்ள பொருட்களை பறிமுதல் செய்து, சீல் வைத்திருக்கிறோம். அதன் உரிமையாளர் அஷோக் குமார் என்பவரை உணவுக் கலப்படம், நச்சு உணவை விற்றது, ஏமாற்றியது ஆகிய வழக்குகளின் கீழ் கைது செய்திருக்கிறோம்" என்றார்.  

சைவ உணவு சாப்பிடுபவர்களில் உடலுக்குத் தேவையான புரோட்டின் பனீரிலிருந்து தான் கிடைக்கிறது. சிக்கனில் போடும் ஹார்மோன் ஊசியால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டாலும் அது அதிகம் பாதிப்பது பெண் குழந்தைகளைத் தான். 8, 9 வயதிலேயே பூப்பெய்து அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சரி மீன் சாப்பிடலாம் என்றால், பழைய மீன்களில் ஃபார்மலினை செலுத்தி, பல மாதங்களுக்குப் பிறகும் ஃப்ரெஷ்ஷாக மார்க்கெட்டில் உலவ விடுகின்றனர். இதை சாப்பிடுபவர்கள், கேன்சருக்கு ஆளாகிறார்கள். 

சிக்கனும், மீனும் இப்படியான விளைவுகளைக் கொண்டிருக்க, பெரும்பாலானோரின் கவனம் பனீர் பக்கம் திரும்பியது. ஆனால் அதிலும் இப்படியொரு கலப்படத்தைக் கண்டு, அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் கட்டுப் படுத்த முடியவில்லை. 

சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்த இந்த பனீர் வயிறு, குடல் சம்பந்தமான பிரச்னைகளை உண்டாக்கும். அதோடு கேன்சரையும் போனஸாகக் கொடுத்திடும். 
அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறு நீங்கள் சாப்பிட்ட பனீரில் கலப்படம் இருப்பதை உணர்த்தும். 

நவீனம் என்ற பெயரில் நல்ல உணவுகளை புறம் தள்ளினோம், இப்போது நாமே தேடிச் சென்றாலும் கிடைக்காத நிலைமையில் தான் இவ்வுலகம் இருக்கிறது. இதன் அடுத்தக் கட்டமாக, விட்டமின், புரோட்டின் என அனைத்து நியூட்ரியன்ட்களுக்கும் மாத்திரைகளை மட்டுமே சாப்பிடும் நாளும் வெகு தொலைவில் இல்லை. 

இப்படி உணவுக் கலப்படம் செய்பவர்கள் கையும் களவுமாகப் பிடிப்பட்டால், அவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும். ஆயுள் தண்டனை போன்றவைகள் வழங்கப் பட்டால் ஒழிய, மற்றவர்கள் இந்த மாதிரியான செயலில் ஈடுபடாமல் இருப்பார்கள். 

உயிருடன் விளையாடும் இவர்களுக்கு தன் குடும்பத்தினரும் மற்ற நிறுவன தயாரிப்பு உணவுகளைத் தான் சாப்பிடுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 


www.newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.