இன்று உலக தண்ணீர் தினம்: ஆரோக்கியத்துக்கு தண்ணீர் ஏன் அவ்வளவு முக்கியம்...?

  Shalini Chandra Sekar   | Last Modified : 22 Mar, 2018 11:41 am

'நீரின்றி அமையாது உலகு' என வான்புகழ் கொண்ட வள்ளுவன் சொன்னார். பூமி 71 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது என அறிவியல் சொல்கிறது. ஆனால் பாருங்கள் தண்ணீருக்காக தினம் ஒரு மூலையில் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் உலகத்தில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இன்று உலக தண்ணீர் தினம். அதனால் தண்ணீரைப் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்துக் கொள்ள, இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபாவை அனுகினோம்...

தண்ணிக்கு ஞாபக சக்தி உள்ளது. நாம் என்ன மனநிலையில் அதை குடிக்கிறோமோ, அதன்படி விளைவுகளை ஏற்படுத்தும். பார்ப்பதற்கு கண்ணாடி மாதிரி இருந்தாலும் அதனுள் நிறைய பவர் அடங்கியிருக்கிறது. அதோடு தண்ணீருக்கு உணர்வுகளும் உள்ளது. ஒரு பாட்டில் தண்ணீரை பக்கத்தில் வைத்து, அதை நன்றாக திட்டிவிட்டு அதைக் குடித்துப் பாருங்கள், ஒரு நெகடிவ் மாற்றம் தெரியும். அதே தண்ணீரை 'என் தாகத்தை தீர்க்குற, நீ இல்லாம எப்படி இருக்குறது' என புகழ்ந்து, பின்னர் குடித்துப் பாருங்கள் நிச்சயம் ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை உணர்வீர்கள். காரணம் என்னவென்றால், தண்ணீரின் 'மாலிக்குலர் ஸ்ட்ரக்சர்' மனிதனின் உணர்வில் கலக்கும். அப்போது ஏற்படும் 'மேக்னெடிக் கோட்' மூலமாக அது ஈர்க்கப்படும்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், குடிசை வாழ் மக்களுக்கு சுத்தமான தண்ணீரே கிடைக்காது, டேஸ்ட், நிறம் என எல்லாமே குறைந்து தான் இருக்கும். ஆனால் இதனால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. காரணம் தண்ணீர் கிடைக்காமல் நாள்தோறும் அவர்கள் கஷ்டப்படுவதால், கிடைக்கும் நீரை பொக்கிஷமாக கையாள்வார்கள்.

தண்ணீர் ஏன் முக்கியம்? குழந்தையின் உடலில் 75 சதவிகிதத்தில் ஆரம்பித்து வயதாகும் போது 55 சதவிகிதம் வரை மனிதனின் உடலில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது. தண்ணீர் ஒரு முக்கியமான நியூட்ரியன்ட். இதில் 'அயான்' என்கிற மாலிக்யூல் இருக்கிறது. ஆனால் நமக்கு மொத்த நியூட்ரிஷியனையும் கொண்டு சேர்ப்பது இந்தத் தண்ணீர் தான். நம் உடலில் திரவத்தை பேலன்ஸ் செய்வதே இந்தத் தண்ணீர் தான். வியர்வை, சிறுநீர், மலம் என நம் உடலில் இருந்து நிறைய கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன. அப்போது 'அயானின்' கான்சன்ட்ரேஷன் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதனால் தண்ணீர் அதிகம் தேவைப்படும். விக்கல், வறண்டுப் போதல் எல்லாமே இந்த அயான் கான்சன்ட்ரேஷன்ஷன் அதிகமாவதால் தான். நமது உடல் இயக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால், ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகும். அப்போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு, சில சமயம் ரத்தம் உறைந்து ஆங்காங்கே அடைத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. நல்ல பழக்க வழகங்களுடன் இருப்பதற்கும் தண்ணீர் மிகவும் அவசியம். ஒருவர் தண்ணீர் குடிக்கவில்லை என்றால், எரிந்துவிழும் மனநிலையில் தான் இருப்பார். அவரால் சரியாகவோ, தெளிவாகவோ எதையும் யோசிக்க முடியாது.

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வெளியில் செல்கிறார்கள் என்பதால், பல பள்ளிகளில் தண்ணீர் குடிக்க அனுமதி இல்லை. இதனால் அவர்களின் கவனம் சிதறடிக்கப்பட்டு, சிந்தனைத் திறனும் பாதிப்படைகிறது. சிலருக்கு தாகமே எடுக்காது, அதனால் தண்ணீர் குடிக்கும் பழக்கமே இருக்காது. ஆனால் அவர்கள் மிகவும் 'புவர் மெமரி'யாக இருப்பார்கள். குறிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டிய நேரத்தை விட்டு விட்டு, தவறான நேரத்தில் குடிப்பது நம்மை பல சிக்கல்களில் கொண்டுப் போய்விடும். முக்கியமாக சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கவே கூடாது. சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பும் சாப்பிட்ட பின் 30 நிமிடம் கழித்தும் தான் தண்ணீர் டர்ந்தால் நாளடைவில் குடல் அரித்துப் போய், அல்சர், வீக்கம் ஏன் கேன்சர் கூட வர வாய்ப்புள்ளது.

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்? சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பும், பின்பும் கால் வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும். அரை வயிறு சாப்பாடு போக மீதி கால் வயிறு காலியாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் ஜீரணமாகும்.

சிறுநீரகம்: சிறுநீரகத்தின் முக்கிய வேலையே உடலின் தண்ணீர் அளவை பேலன்ஸ் செய்வது தான். அதனால் சரியாக தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநிரகத்தால் சரிவர கழிவுகளைப் பிரித்தெடுக்க முடியாது. அதனால் அந்த கழிவுகள் அப்படியே தங்கி, நாளடைவில் 'கல்'லாக மாறுகின்றது. சிறுநீரகத்தின் செயல்திறன் குறைந்து, கால், நுரையீரல் போன்ற இடங்களில் நீர் கோத்துக்கொள்கிறது.

இதயம்: இதயமானது ரத்தத்தின் வால்யூமை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் இதயத்துடிப்பை சரிச்செய்யும். அந்த வால்யூமுக்கு தண்ணீர் மிக முக்கியம். தண்ணீர் சரியாகக் குடிக்காதவர்கள் அடிக்கடி மயங்கி விழுவார்கள். நிறைய பேர் எனக்குத்தான் தாகமே எடுக்கவில்லையே? அப்புறம் நான் ஏன் சும்மாவே தண்ணீர் குடிக்கனும் என கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால் தான் மற்ற எல்லா வேலைகளுமே சரிவர நடக்கும்.

சருமம்: நம்முடைய சருமத்தின் 30 சதவிகித செயல்பாடு தண்ணீரை மையமாக வைத்தே நடைப்பெறுகிறது. தோல் டைட்டாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும், மிருதுவாகவும் இருக்க தண்ணீர் மிக அவசியம். தோல் வறண்டு போதல், முகப்பரு, அரிப்பு ஆகியவை என எல்லாவற்றிற்கும் தண்ணீர் பற்றாக்குறையே மிக முக்கியக் காரணம். தண்ணீர் அதிகம் குடிக்கும் போது வியர்வையின் மூலம் நச்சுக்களை வெளியேற்றி ஸ்கின்னை ஃபிரெஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் வியர்க்காமல், நச்சுக்கள் எல்லாம் ஸ்கின்னிலேயே தங்கிவிடும்.

எவ்வளவு தண்ணீர் குடிக்கனும்? ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் 1 டம்ளர் நீர் குடிக்கலாம். அதாவது ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய பேர் கேட்பார்கள், 'எனக்கு தண்ணி பிடிக்கல, அதனால டீ, காஃபி, கூல் டிரிங்ஸ்ன்னு குடிக்கிறேன். இது தண்ணியோட தேவையை பூர்த்தி செஞ்சிடாதா என', தண்ணீரோட கலோரி வேறு, மற்ற பானங்களில் சர்க்கரை, பால், சுவையூட்டும் பொருட்கள் போன்றவற்றை சேர்ப்பதால், அதோடு தன்மை மாறிவிடும். அதனால் தண்ணீரின் தேவையை தண்ணீரால் மட்டும் தான் பூர்த்தி செய்ய முடியும். வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காதவர்கள், பாட்டலில் எலுமிச்சை, வெள்ளரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் நறுக்கி சில துண்டுகள் மட்டும் போட்டு குடிக்கலாம். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் இன்னும் சீக்கிரம் வெளியேறும்.

காலை எழுந்ததும் 1 லிருந்து 2 கிளாஸ் (300 - 600 மி.லி) தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். அதுவும் உறிஞ்சிக் குடிக்க வேண்டும். இது நமது ஒவ்வொரு செல்லுக்கும் நீர்ச்சத்தைக் கொடுக்கும். முக்கியமாக நமது ஜீரண மண்டலம் சரியான முறையில் கழிவுகளை நீக்க உதவும். ஏனென்றால் காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை நமது குடல் அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும், அப்போது இப்படி தண்ணீரை உறிஞ்சிக் குடிக்க, அது ஓவ்வொரு செல்லிலிருக்கும் நச்சுக்களையும் மலத்தின் மூலம் வெளியேற்றும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரை அன்னாந்தோ, 'மடக் மடக்' என 'கல்ப்' செய்தோ குடிக்கக் கூடாது.

டீ, காபி முதலில் எனர்ஜியைக் கொடுத்தாலும், அதிலுள்ள நச்சுக்கள் நரம்பை பலவீனமாக்கும். அதேபோல், தண்ணீரை எப்போதும் காய்ச்சி குளிரவைத்து தான் குடிக்க வேண்டும். ஆவி பறக்க குடிக்கக் கூடாது. அடுத்தது, காலை உணவுக்கு 30 நிமிடம் முன்னர் 300 மி.லி குடிக்கலாம். 12 மணிநேரம் கழித்து சாப்பிடுகிறோம் நமது ஜீரண மண்டலத்தை தயார் செய்யவே இந்த 300 மி.லி. பிறகு சாப்பிட்டப்பின் 300 மி.லி, இது உணவில் உள்ள நியூட்ரியன்ட்ஸை செல்லுக்கு அனுப்ப உதவும். இதேபோல் மதிய உணவுக்கு முன்னும் பின்னும் 300 மி.லி. ஆனால் கண்டிப்பாக சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. பின்பு இரவு உணவுக்கு முன், பின் 300 மி.லி. இதற்கிடையில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் 1 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். நிறையப் பேருக்குத் தெரியாது, நீங்கள் குடிக்கும் கூல் டிரிங்குகள் உங்களுக்கு நீர்ச்சத்துக் குறைப்பாட்டை உண்டாக்கும். ஏனென்றால் அதிலிருக்கும் 'கேஸ்' வறண்டுப்போகச் செய்யும்.

ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் நமது ஒவ்வொரு உறுப்பும் அதிவேகமாக செயல்படும். அதற்கெல்லாம் தண்ணீர் மிக மிக அவசியம். இரவு தண்ணீர் குடிக்கக் கூடாது என சில பேர் சொல்வார்கள். ஆனால் தூங்குவதற்கு முன் 2 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம். ஏனென்றால் ஒரு 8 மணி நேரம் செயல்படும் உறுப்புகளுக்கு தண்ணீர் வேண்டும். சரியான முறையில் தண்ணீர் குடிப்பதால் கேன்சரைக் கூட வராமல் தடுக்க முடியும். தண்ணீர் நிறைய குடிப்பதால் கடினமான மூட்டுக்கள் கூட லேசாகும், தசைப்பிடிப்பு ஏற்படாது. அதுவும் காய்ச்சிய நீரை மண் பானையில் வைத்து குளிரச்செய்து குடித்தால் அதற்கு நிகர் வேறொன்றுமே இல்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close