உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாதாம் !

  கனிமொழி   | Last Modified : 06 Sep, 2018 01:01 pm

shouldnt-drink-water-immediately-after-meals

உணவிற்க்கு முன்னும் பின்னரும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலமுறை விவாதித்துள்ளோம். உணவு அருந்திய பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இங்கு பலருக்கும் உண்டு. அதிக தண்ணீர் குடித்தால் மட்டுமே நாம் சாப்பிட்ட உணவு செரிக்கும் என்ற எண்ணம் மிக தவறானது.

உலகளவில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களும் உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது குறித்து நடத்தபட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம் நம் உணவு செரிமானம் தடை செய்யபட்டு உடலில் உள்ள இன்சுலின் நிலை அதிகரிக்கப்படும் என தெரியவந்தது.

"நாம் சாப்பிடும் உணவு செரிக்க குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். உணவிற்கு முன் தண்ணீர் அருந்துவதால் சீக்கிரமே உணவு செரித்துவிடும். இது உடலுக்கு நல்லது அல்ல. அதே போல உணவு சாப்பிடும் போதே தண்ணீர் குடிப்பதும் சரி இல்லை. இதனால் பெருங்குடல் விரிவடைய வாய்புகள் உண்டு. அதுமட்டும் இல்லாமல் உணவிற்கு பிறகு உடனே தண்ணீர் குடித்தால் சீக்கிரம் பசி எடுக்க ஆரம்பித்து விடும். அதோடு சேர்த்து குடல் வீக்கம் அடையவும் வாய்ப்புகள் இருக்கு." என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கிறார். 

உணவிற்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டு, உணவு சாப்பிடுவதற்க்கு அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.  அதே போல உணவிற்கு பின்னரும் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதையே பல ஊட்டசத்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதுவே நம் பெருங்குடலுக்கும் நல்லது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.