குளிர்காலம் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பொருட்கள்!

  திஷா   | Last Modified : 01 Dec, 2018 03:54 pm
essential-food-for-winter

காலநிலை மாறுகிறது. ஸ்வெட்டர் தேவைப்படும் குளிர்காலம் வந்துவிட்டது. இனி சூடான சூப்பும், ஹாட் சாக்லெட்டும் பலரின் அபிமான உணவுகளாக மாறிவிடும். டெங்கு, ஃப்ளூ போன்ற பல வகையான காய்ச்சல்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாம் சாப்பிடும் உணவில் சிலவற்றை மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம். 

இஞ்சி - குளிர்காலத்தில் டீ, சூப் என அனைத்திலும் அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பொருள். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்கும். 

பூண்டு - வாசனையுடன் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் அல்லிசின் என்ற மூலக்கூறும் அதிகம் உள்ளது. 

சிட்ரஸ் - வைட்டமின் சி அதிகமிருக்கும் எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி போன்றவை. 

கீரைகள் - பசலை, பரட்டை மற்றும் வெந்தயக்கீரை ஆகியவற்றில் குறைந்த கலோரியும், அதிக ஆன்டி ஆக்ஸிடென்டும், பீட்டா கரோட்டினும் விட்டமின் சி-யும் நிறைந்துள்ளன. இவைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை. 

காளான் - செலினியம், நியாசின், ரைபோஃப்ளேவின் ஆகிய மூலக்கூறுகளை கொண்டிருக்கும் காளான் குளிர்காலத்திற்கு உகந்தது. 

மஞ்சள் - இந்த முக்கியமான சமையல் பொருளை நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் முடிந்தளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close