சர்க்கரை நோய் புண், இதயப் பாதுகாப்புக்கு சிறந்த தீர்வு கோமியம்!

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 01:22 pm

cow-urine-can-treat-diabetic-wounds-good-for-heart

மனித உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் தன்னிகரில்லாத பொருளாக கோமாதாவின் கோமியம் இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. முற்போக்காளர்கள் அல்லது அறிவுஜீவிகள் என தன்னைத் தானே கருதிக் கொள்பவர்கள், கோமியத்தின் சிறப்புகளைப் புறக்கணித்து, அதுகுறித்து ஏளனம் செய்வது இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவர்களது ஏளனங்களையும், விமர்சனங்களையும் பொய்யாக்கும் வகையிலான ஆய்வு முடிவுகளும் அவ்வபோது வெளிவந்த வண்ணம்தான் உள்ளன.

ரத்தசோகை, அடிவயிற்று வலி, தோல்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் போன்றவற்றுக்கு அருமருந்தாக கோமியம் விளங்குகிறது என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்ட விஷயமாகும். இன்னும், சொல்லப்போனால், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக் கூடிய வல்லமை கோமியத்துக்கு உண்டு என்கிறது மருத்துவ அறிவியல் உலகம்.

இத்தகைய சூழலில், இதயப் பாதுகாப்புக்கும், சர்க்கரை நோயினால் ஏற்படும் புண்களை ஆற்றுவதற்கும் சிறந்த தீர்வாக கோமியம் உள்ளது என்பதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.

குஜராத் மாநிலம், ஜுனாகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கோமியத்தை தொடர்ந்து 28 நாட்கள் எலிகளுக்கு ஊசி மூலமாக செலுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் இதயப் பாதுகாப்பு மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது, myocardial ischemia என்ற இதய பாதிப்புக்கு கோமியம் நிவாரணியாக அமைந்துள்ளது. இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதினால், ஆக்சிஜன் விநியோகமும் குறைந்து, அதன் பிறகு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கு வித்திடுவதே myocardinal ischemia ஆகும். அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு கோமியம் பயன்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதேபோன்று, குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியிலும் கோமியத்தைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அதில், சர்க்கரை நோயினால் வரும் புண்களில், கோமியத்தை மருந்தாகப் பயன்படுத்தும்போது, திசுவளர்ச்சி விரைவாக ஏற்படுவதாகவும், அதனால், புண் எளிதில் குணமாகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு மருத்துவப் பயன்பாட்டுக்காக பக்குவப்படுத்தப்படும் கோமியத்தை ஆங்கிலத்தில் ‘அர்க்’ எனக் குறிப்பிடுகின்றனர். 

இன்றைய உலகில், ரத்தக் குழாய் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்று 40 வயதுக்கு மேற்பட்டோரில் சர்க்கரை நோய் பாதிப்பு அல்லாதவர்களை விரல் நீட்டி எண்ணிவிடலாம்.

இத்தகைய நிலையில், பெரிய அளவிலான செலவுகள் எதுவும் இன்றி, பக்குவம் செய்யப்பட்ட கோமியத்தைக் கொண்டு, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை ஆய்வு முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. 

என்னதான் கோமியம் மருத்துவக் குணம் உடையது என்றாலும், வெகுஜன மக்களின் பயன்பாட்டுக்கு அது வந்து சேரவில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அதன் மகத்துவத்தைப் புரிந்துகொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களோ, அதை வியாபாரப் பொருள்களாக விற்பனை செய்யத் தொடங்கிவிட்டன. மருத்துவ முறைகளுடன் பக்குவப்படுத்தப்பட்ட கோமியம் அடங்கிய புட்டிகள் இன்றைய இணைய வர்த்தக தளங்களில் விற்பனைக்கு காணக் கிடைப்பதே அதற்கு சாட்சி.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.