உங்களுடைய மண்டை எப்போதும் எண்ணெய் பிசுக்குடன் இருக்கிறதா? இதோ டிப்ஸ்!

  திஷா   | Last Modified : 18 Dec, 2018 04:37 pm
tips-for-oily-scalp

எப்போதும் டல்லான முகத்துடன் இருப்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு 'ஆய்லி ஸ்கால்ப்பாக' இருக்கும். இது அவ்வளவு பெரிய பிரச்னையில்லை. நாங்கள் சொல்லும் டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள். 

சரியான பராமரிப்பு 

அவரவர் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூவை பயன்படுத்துவது அவசியம். அதனால் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் ஷாம்பூவை, கட்டாயம் மருத்துவரின் பரிந்துரையுடன் பயன்படுத்துங்கள். 

அதிக அலசல் வேண்டாம் 

அதிகமுறை தலையை அலசினால் எண்ணெய் தன்மை போய்விடும் என்பதை விட, சீபத்தின் சுரப்பு அதிகமாகி கூந்தல் இன்னும் பிசுபிசுப்பாகும் என்பதே சரியான உண்மை. அதனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தலை அலசுங்கள். 

ஹேர் ஸ்டைல் 

எப்போதும் ஒரே ஹேர் ஸ்டைலை பின்பற்றுவதை விட, அவ்வப்போது மாற்றிப் பாருங்கள். இது உங்களுக்கு வித்தியாசமான தோற்றத்தைத் தரும். 

ட்ரை ஷாம்பூ 

ஸ்கால்ப் அரித்தால் உடனே தலைக்குக் குளிப்பதற்கு பதிலாக, வெறும் ஷாம்பூவை கூந்தலில் அப்ளை செய்து விட்டு விடுங்கள். இது அதிக எண்ணெய்யை ஈர்த்து, கூந்தலை அடர்த்தியாக மாற்றி, கூந்தலுக்கு நறுமணத்தைக் கொடுக்கும். இந்த ட்ரை ஷாம்பூ, இரண்டு, மூன்று நாட்கள் வரை உங்களுக்கு உதவியாக இருக்கும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close