ஆஹா...... அருகம்புல்!!!

  கோமதி   | Last Modified : 18 Dec, 2018 06:13 pm
wow-scutch-grass-arugam-pul

உடலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று  சத்து பானங்களைத் தேடி தேடி குடிக்கிறோம்.இதில் விட்டமின் ஏ இருக்கிறது. இதில் விட்டமின் இ இருக்கிறது என்று ஒவ்வொன்றையும் எடுத்து கொள்ளும் பலருக்கும் அற்புதமான வகையில் அத்தனை சத்துக்களும் அருகம்புல்லில் இருக்கிறது என்பது தெரிவதில்லை.அருகம்புல் வாத,பித்த,சிலேத்துமம் என்கிற மூன்று தோஷங்களையும் போக்கும் குணமுடையது. உடலில் பற்றிகொண்டு  நகராமல் இருக்கும் சளியைக் கரைத்து வெளியேற்றும்  தன்மை கொண்டது.

இயற்கையாக கிடைக்கும் அருகம்புல் செயல் இழந்த உடல் உறுப்புகளை சிறுக சிறுக எல்லா சுரப்பிகளையும் இயற்கையாக செயல்பட வைத்து இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.காலையில் அருகம்புல் ஒரு கட்டு எடுத்து, விரல் நீள இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்த அருகம்புல்லுடன் வேண்டிய நீர் விட்டு சாறுபிழிந்து தேன் சேர்த்து கலந்து சிறிது சிறிதாக ருசித்து பருகலாம். இது காரமானது  கசப்பு தன்மையுடையது என்பதால் தேன் சேர்க்கலாம்.

நல்ல தளிர் அருகம்புல்லை பறித்து சுத்தமான நீரில் அலசி மைய அரைத்து, பசும்பாலில் அரைத்த விழுதை சேர்த்து சுண்டக்காய்ச்சி தினமும் படுக்கும் முன் குடித்துவந்தால் உடல் பலவீனமுள்ளவர்கள் விரைவில் நல்ல பலன் அடைவர். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகள் வளரும்போதே போதிய ஊட்ட சத்துடன் ஆரோக்யமாக வளர்வார்கள். விழுதாக அரைக்கவில்லையென்றாலும்  சுத்தம் செய்த அருகம் புல்லை நீரில் காய்ச்சி வடிகட்டி மிதமான சூட்டில் அச்சாறை பருகி வந்தால் இதயம் வலுப் பெறும். உடல் ஆரோக்யமும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை போக்கும்.உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கும். உடலில்  வரக்கூடிய 80% நோய்களைத் தவிர்க்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close