முழங்கை கருமையைப் போக்க எளிய குறிப்புகள்!

  Suja   | Last Modified : 05 Apr, 2018 01:53 pm

எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தான் நினைப்பார்கள். இந்த அழகு சம்மந்த பட்ட விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். பொதுவான பிரச்சனை என்றால் முழங்கையில் இருக்கும் கருப்பு, என்னதான் கிரீம் போட்டாலும், தோலானது வறண்டு, கருப்பாக தெரியும். இதனை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும். அதனை இந்த பகுதியில் தெளிவாகப் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச் சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால் முழங்கையில் உள்ள கருமை நிறம் காணாமல் போகும்.

எலுமிச்சைச் சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் முழங்கையில் இருக்கும் கருமை நிறம் போய்விடும்.

1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதன்மூலம் ழுழங்கையில் உள்ள கருமை நிறம் நீங்குவதுடன், தோல் மென்மையாக இருக்கும்.

பப்பாளியை மசித்து முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், முழங்கையில் இருக்கும் கருமை மறைந்து வெள்ளையாகும்.

உருளைக்கிழங்கு சருமத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் நீங்கா கருமைகளைப் போக்கும். எனவே, உருளைக்கிழங்கை அரைத்து அதில் சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், விரைவில் கருமை நிறம் நீங்கி தோல் பளபளப்பாக மாறும்.

கடலை மாவு மற்றும் தயிரை சரிசம அளவில் கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் கண்கூடாகக் காணலாம்.

கற்றாழை ஜெல்லை தினமும் முழங்கையில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முழங்கையில் உள்ள கருமை நிறம் விரைவில் நீங்கும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.