உடல் பருமனை குறைக்கும் தூக்கம்! 

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 05:02 pm
weight-loss-in-sleeping

ஒருவர் தினமும் இரவில் அதிகளவு தூக்கத்தை மேற்கொண்டாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்,.. பின்வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாக உடல் பருமனை குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க  இருட்டான அறையில் உறங்கவும் , இதனால் உடலில் 'மெலடோனின்' உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் எளிதில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் மூலம், கலோரிகளை எரிக்கும் ப்ரௌன் கொழுப்பு உற்பத்தி செய்யப்படும். 


 
இரவு நேரத்தில் தூங்கும் முன் மதுவைக் குடிக்க கூடாது. உடலானது ஆல்கஹாலை வளர்சிதை மாற்றம் செய்யும் பணியில் ஈடுபடுவதால் , ஓய்வு நிலைக்கு செல்ல இயலாது . இதனால் கலோரிகள் எரிக்கப்படாது.

பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது , மூளையானது வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடும். ஆனால் தாமதமாக உணவை உட்கொண்டால், வளர்ச்சி ஹார்மோன்களானது உணவுகளில் சேர்ந்து, எரிபொருளாவதற்கு பதிலாக கொழுப்புக்களாக தேங்கிவிடும். 

 மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம், உடலின் சாதாரண செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே இரவு நேரத்தில் தூங்கும் முன் டிவி, மொபைல் போன்றவற்றை 1 மணிநேரத்திற்கு முன்பே  பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.  

ஆய்வு ஒன்றில் வெதுவெதுப்பான அறையில் உறங்கியவர்களை விட , 60 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை கொண்ட அறையில் உறங்கியவர்களின் உடலில் 7 சதவீதம் அதிகமாக கலோரிகள் எரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இரவு தூங்குவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பே உடற்பயிற்சி செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், உடல் ஓய்வு நிலைக்கு செல்லாமல்,  சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close