உடல் எடையை குறைக்க உதவும் பலாக்காய் சமையல்

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 01:37 pm
body-weight-reduce-helps-to-jack

 எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தினசரி 2 கப் பலாக்காயை சமைத்து உண்டு வந்தால், அது உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். இந்த 2 கப் பலாக்காய், 2 சப்பாத்திகளை விட, 1 பௌல் சாதத்தை விட குறைவான கலோரிகளை கொண்டுள்ளதால் , உடல் எடை குறைப்பில் பெரிதும் உதவும். 

சரி பலாப்பழத்தை எளிதாக சாப்பிட்டுவிடலாம் , ஆனால்  பலாக்காயை எவ்வாறு சாப்பிடுவது?... உங்களுக்காக எளிய முறையில்  பலாக்காய்  பொரியல்.

தேவையான பொருட்கள்: 

சிறிய பலாக்காய் – 1 
தேங்காய் – 1/2 மூடி ( விருப்பத்திற்கேற்ப)
பச்சை மிளகாய் – 5 
வெங்காயம் – 2 
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன் 
எண்ணெய் – 2 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 

பலாக்காயின் தோலைச் சீவி , துண்டுகளாக நருக்கிய பின்னர் , போதிய அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான உப்புப் போட்டு வேக வைக்கவும். பின்னர் , அதிலுள்ள தண்ணீரை வடித்து விட்டு,. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பைத் தாளித்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் வேகவைத்த பலாக்காய் ஆகியவற்றை சேர்த்து சிறுது நேரம் கழித்து துருவிய தேங்காயை சேர்க்கவும் ... ருசியான ஆரோக்கிய பலாக்காய் பொரியல் தயார்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close