குற‌ட்டை விடுவதால் இதய நோய் ஏற்படுமா?

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 12:38 pm
snoring-cause-heart-disease

பல நாடுகளில் குறட்டைவிடும் கணவனிடமிருந்து விவாகரத்துக் கோரும் அளவுக்கு விபரீதப் பிரச்னையாகக் குறட்டை உள்ளது.  பொதுவாக, ஏழு சதவிகித ஆண்களையும், நான்கு சதவிகிதப் பெண்களையும் இந்த குறட்டை பிரச்னை பாதிக்கின்றது.  குறட்டை  ஏன் ஏற்படுகிறது, குறட்டையால் ஏற்படும் உடல் உபாதைகள், இதனை தடுக்கும் வழிமுறைகள் என்ன? என்பதை பற்றி  பார்க்கலாம்...

 குறட்டை  ஏன் ஏற்படுகிறது?

பொதுவாக மூச்சுப்பாதையில் ஏற்படும் தடைகளே குறட்டை விடுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.  நாம் உறங்கும் போது தொண்டை தசை தளர்வடைந்து  மூச்சுப்பாதையின் அளவு குறைவதால், மூச்சுக்காற்று நுறையீரலுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் போது எழும் சத்தமே குறட்டை.  மேலும், மேல் நோக்கி படுத்து உறங்கும் போது நாக்கு உள்வாங்கி தொண்டையில் இறங்கி, மூச்சுப்பாதையை அடக்கப்பதனால் குறட்டை சத்தம் எழும்.

சளி தொந்தரவால் ஏற்படும் மூக்கடைப்பு,  சுவாச அலர்ஜி, சைனஸ்,  டான்சில்  வளர்ச்சி,  தைரய்டு பிரச்சனையால் தொண்டையை சுற்றி ஏற்படும் வீக்கம், உடல் பருமனால்  கழுத்தில் படியும் கொழுப்பு, மேலும் புகை, மது பழக்கங்களால் தொண்டையில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றால் மூச்சுக்காற்று உள் செல்வதில் தடை ஏற்படும். இதனால் குறட்டை  சத்தம் ஏற்படுகிறது.

குறட்டையால் சந்திக்க நேரிடும் உடல் உபாதைகள்:

 இரவில் தூங்கும் போது ஏற்படும் குறட்டையின் சத்தம் , சில நேரங்களில் ஏற்ற இறக்கத்துடன்  கேட்கும், திடிரென அறவே  சத்தம் கேட்காது.  அவ்வாறு ஏற்பட கார‌ணம் மூளைக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதாகும்.  இது உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும்.  இந்த நேரங்களில் சத்தம்  குறைந்து,  திடிரென  உடலில் குலுங்க‌ள் ஏற்படும்.  இதனால் இதயம் தொடர்பான பிரச்னை  ஏற்பட அதிக வாய்ப்புள்ளது, மேலும்  காலையில் எழுந்தவுடன் கடுமையான தலைவலி,  உடல் சோர்வு,  வேலையில் கவனமின்மை, ஞாபக மறதி,  ரத்த அழுத்தம் அதிகரித்தல்,  நுரையீரல் பாதிப்பு, மூளை பிரச்சனை உள்ளிட்ட ஆபத்தான நோய்களை சந்திக்க நேரிடும்.

குறட்டையை தடுக்கும் வழிமுறைகள் என்ன? 

தூங்குவதற்கு முன்பு சுடுநீர் ஆவி பிடிப்பதன் மூலம் தற்காலிக தொண்டை அடைப்பு சரியாகும்.   இதனால் குறட்டை ஏற்படுவது குறைய வாய்ப்புள்ளது.

மது, புகைப்பிடித்தல் பழக்கம் இருப்பவர்கள் அதனை அறவே  தவிர்க்க வேண்டும்.  இதனால், தொண்டையில் புண் ஏற்படுவதால் உருவாகும் குறட்டையை தடுக்கலாம்.

துரித உணவு என கூறப்படும் பீட்ஸா, பர்க்கர், பிரைட் ரைஸ் போன்றவைகளையும், கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடல் பருமன் அதிகரிப்பதால் சந்திக்க கூடிய பெரும் பிரச்னையில் குறட்டையும் ஒன்று.  எனவே தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொண்டு  உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு  கழுத்தில் ஏற்படும் வீக்கத்தால் குறட்டை கட்டாயம் ஏற்படும். எனவே தைராய்டை கட்டுக்குள் வைக்க தேவையான மருந்துகளை முறையாக ஏடுத்துக்கொள்ள வேண்டும்.

தூங்கும் போது தலை உயர்த்தி இருக்குமாறு தலையணையை வைத்து உறங்க வேண்டும். மேலும் பக்க  வாட்டில்  படுத்து உறங்குவதால் குறட்டையை தவிர்க்க முடியும்.

தூக்க மாத்திரகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பதால், குறட்டை மட்டுமல்ல பல உடல் உபாதைகளிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

அவரவர் உடல் நிலையை பொறுத்து குறட்டையின் ஆபாத்து இருக்கும். எனவே மருத்துவ ஆலோசனை பெறுவதும், தேவை ஏற்பட்டால் சிக்கிச்சை மேற்கொள்வதும் குறட்டையை முற்றிலுமாக தவிர்க்க உதவும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close