ஜில்.. ஜில்.. கூல்..கூல்... சம்மர் ஜூஸ்..

  தனலக்ஷ்மி   | Last Modified : 06 Apr, 2019 03:09 pm
summer-juice

நோயற்ற வாழ்க்கை உறுதியான உடல்வாகு தெளிவான மனநிலை இதெல்லாம் கொண்ட நீண்ட ஆயுள் நமது முன்னோர்களுடையது. இன்று 40 வயதை நெருங்கும் போதே நோயும் வளர ஆரம்பிக்கிறது. இதற்கு வேகமான விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரு காரணமாக சொல்லலாம். அதில் முக்கியமான ஒன்று உணவுமுறை.

நமது முன்னோர்களின் உணவுப்பழக்கங்களை எப்போது நாம் மறக்க தொடங்கினோமோ அப்போதே பெயர் தெரியாத பல நோய்களையும் வரவேற்க தொடங்கிவிட்டோம். நமது முன்னோர்களின் உணவுமுறைகள் அனைத்தும் உடல் ஆரோக்யத்தை மையமாக  கொண்டே இருந்தது. அதனால்தான் குளிர்காலம், கோடைக்காலம் என்பதற்கேற்ப சமையல் வகைகளையும் மாற்றி அமைத்தார்கள். 

குறிப்பிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட பொருள்கள் எப்போதும்  அடுப்படியில் அஞ்சறைப்பெட்டியில் அடங்கியிருக்கும். மிளகு, சீரகம், ஓமம், சோம்பு, வெந்தயம் இப்படி பலவும் அனைத்து காலங்களிலும் பயன்படுத்தினார்கள். 

சீரகம்= சீர்+ அகம்...உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்திருந்ததால் இது சீரகம் என்றழைக்கப்பட்டது. அனு  தினமும் சீரகத்தண்ணீர்.. உடலில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து நம்மை ஆரோக்யமாக வைத்திருக்கும். எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சீரகத்தைக் கோடையிலும் அதிகம் உபயோகப்படுத்தினால் நிச்சயம் உடல் குளுமைபெறும்... அதிலும் கோடையில் இளநீர், பழச்சாறுகள், நுங்கு, மோர் இவற்றோடு குளிச்சி தரும் மின்ட்கர்ட் ஜீரா ஜூஸும் முக்கியமே..

மின்ட்கர்ட்  ஜீரா ஜூஸ்..

தேவை: தயிர் -2 கப், புதினா -1 கப் ,சீரகம் -3 டீஸ்பூன், நாட்டு சர்க்கரை -3 மேசைக் கரண்டி, உப்பு- ருசிக்கேற்ப.

செய்முறை: புதினா இலைகளைச் சுத்தம் செய்து அரைலிட்டர் தண்ணீரில் சீரகம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.. கொதித்த புதினா நீரை வடிகட்டி நாட்டுச் சர்க்கரை, ருசிக்கு உப்பு சேர்த்து தயிரில் கலக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து அருந்தவும். புதினாவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் உண்டு. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மேலும் சிறிது நாட்டுசர்க்கரை சேர்த்து கொடுக்கலாம். சப்பு கொட்டி குடிப்பார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close