இரத்த கொதிப்பை உண்டாக்கும், 5 முக்கிய காரணிகள்:

  கண்மணி   | Last Modified : 12 Apr, 2019 04:31 pm
5-habits-may-be-causing-hypertension

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இதயம், உடலுக்கு தேவையான இரத்தத்தை அனுப்புகிறது.  அப்போது ஏற்படும் அழுத்த மாற்றமே, இரத்த அழுத்தமாகும்.  இந்த இரத்த அழுத்தம் எப்போழுதும் ஒரே மாதிரியாக‌  இருப்பதில்லை.  மாறாக, காலையில் குறைவாக இருக்கும் இரத்த அழுத்தம், மாலையில் அதிகமாகும். அதேபோல், உடற்பயிற்சியின் போதும், உணர்ச்சி வசப்படும் போதும் அதிகமாகும், இரத்த அழுத்தம்,  உறங்கும் பொழுது குறைவாக இருக்கும்.

பொதுவாக, சராசரி நபருக்கு 120/80 எம்.எம்.எச்.ஜிக்கு மேல் இரத்த அழுத்தத்தின் அளவு இருக்க கூடாது.  அவ்வாறு 120/80 எம்.எம்.எச்.ஜிக்கும், அதிகமாக, இரத்த அழுத்தம் இருப்பதையே 'இரத்த கொதிப்பு' என்கின்றனர் மருத்துவர்கள்.  இந்த இரத்த கொதிப்பினால் இதயம் விரைவில் பலவீனமடைந்து, மரணத்தை சந்திக்கும் நிலை ஏற்படும்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, வருடத்திற்கு 3,70,000 பேர் இரத்த கொதிப்பினால் மரணத்தை சந்திக்கின்றனர் என்கிற அதிர்ச்சி தகவல் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும், இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், இதய தமணிகள் பழுதடைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாம்.

இரத்த கொதிப்பை ஏற்படுத்தும் 5 காரணங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  அவை பின் வருமாறு...

உடல் உழைப்பின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை:

பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமற்ற, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையையே கடை பிடித்து வருகின்றனர். உடல் உழைப்பின்மை மற்றும் சோம்பேறித்தனமாக இருப்பதினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.  இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினை கைவிட்டு, குறைந்த பட்சம் சிறு சிறு உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்வதன் மூலம், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன், நீரிழிவு, உடல் பருமன் அதிகரித்தல் மற்றும்  இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
 
புகைப்பிடித்தல்:


புகைப்பிடிக்கும் பழக்கமானது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இரத்த கொதிப்பு உண்டாக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு முறை புகைப்பிடிக்கும் போதும் ரத்த அழுத்தம் உயர்கிறதாம், இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் இதயத்தமணிகள் பலவீனம் அடைந்து விரைவில், இதயம் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். 

அதிகளவு மது அருந்துதல்:


 அதிக அளவில் மது அருந்துவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாம், மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை  அதிகளவு மது அருந்தும் பழக்கம் ஏற்படுத்தி விடும்.

ஆரோக்கியமற்ற உணவு முறை:

ஆரோக்கிய மற்ற உணவு முறைகளால், குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு மற்றும் சோடியம் கலந்த உணவுகளை சாப்பிடுவதினால், ரத்த அழுத்தம் உயர்வதுடன், இதயம் சம்மந்தமான நோய்களையும் சந்திக்க நேரிடுமாம். மேலும், இத்தகைய உணவு பழக்கம், கிட்னியின் செயல்பாட்டை குறைப்பதுடன்,விரைவில் கிட்னியின் செயலிழப்பிற்கும் வழிவகை செய்கிறது.


மன அழுத்தம் அதிகரித்தல்:


 மன அழுத்தமும், உயர் இரத்த அழுத்தமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவையாக கருதப்படுகிறது.  இத்தகைய, அதிகப்படியான மனக்கவலை, உங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்காது, மாறாக உடல் நலத்தை கெடுத்துவிடும். இத்தகைய மோசமான விளைவுகளை கொடுக்க கூடிய மன அழுத்தத்தை, சமனில் வைத்துக்கொள்ள யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close