நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்

  தனலக்ஷ்மி   | Last Modified : 12 Apr, 2019 07:39 pm
walking-gives-you-the-power-to-walk-and-exercise

ஆசனங்களுக்கெல்லாம் ஆசானாய் இருப்பது தோப்புக்கரணம். முன்பெல்லாம் வாரம் தவறாமல் குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வோம்.  பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டால்தான் வழிபாடு செய்த திருப்தியே வரும். பிள்ளையாரை எங்கு பார்த்தாலும் கைகள் காதுக்கு போய் தோப்புக்கரணம் போட்டுவிடுவோம். இப்போது பிள்ளையாருக்கு வணக்கம் வைப்பதோடு சரி.. இது ஆன்மிக சமாச்சாரம் ஆனால் தோப்புக்கரணம் நம்மை அறிவாளியாக ஆக்கிவிடுகிறது என்பது தெரியுமா?

முன்பெல்லாம் படிக்காமல், வீட்டுப்பாடம் செய்யாமல் வரும் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய தண்டனை தோப்புக்கரணம் தான். காரணம் மனித உடலின் மூளை பகுதியில் வலது இடது இரண்டு பக்கமும் நரம்புகளைத் தூண்டி ஆற்றலை அளித்து நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது தோப்புக்கரணம்.. அன்றாடம் செய்யும் போது  மூளை உடலில் உள்ள மந்தத்தையும் சோர்வையும் நீக்கி அறிவார்ந்த வேலைகளை திறம்பட செய்ய வைக்கிறது... 
 

மருத்துவ ரீதியாகவும் தோப்புக்கரணம் மூளைக்கு சக்தியை தருவதை நிரூபணம் செய்திருக்கிறது, தோப்புக்கரணம் போடுவதால் அக்குபஞ்சர் புள்ளிகள் உடலில் தூண்டப்படுகிறது. மூளையுடன் தொடர்புடைய அனைத்து நரம்புகளும் சக்தி பெறுகிறது என்கிறது ஆய்வு ஒன்று.. ஆனால் தோப்புக்கரணம் எப்படி போடுவது என்று தெரியுமா?

இருகைகள் மாறிய நிலையில் இரு காது மடல்களை பிடித்து குனிந்து அமர்ந்து எழுவதல்ல. இதையும் முறையாக செய்தால் மட்டுமே முழு பலனை  பெறமுடியும். தோப்புக்கரணம் போடுவதற்கு முன்பு நிமிர்ந்து நின்று கால்களை விரித்து இடது கை வலது காது மடலையும் வலது கை இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.

இங்கு வலது கை இடது கையின் மேல் இருப்பது அவசியம்.. கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் காதுகளை பிடிக்க வேண்டும். அதிலும் கட்டை விரல் காதுமடலின் வெளிப்புறமும் ஆள்காட்டி விரல் காது மடலின் உள்புறமும் இருக்க வேண்டும்.

நிமிர்ந்து நின்று  விரல்கள் காது மடல்களைப் பிடித்ததும் மூச்சை உள் இழுத்து முதுகு வளையாமல் உட்கார வேண்டும். பிறகு மூச்சை வெளியிட்டபடி எழ வேண்டும். இப்படி முறையாக செய்தால் தான் முதுகுதண்டுவடத்திற்கு கிடைக்க வேண்டிய மூலாதார சக்தி முழுவதும் கிடைக்கும்.  

இச்சக்தி தூண்டப்பட்டு உடல் முழுவதும் உள்ள சோர்வை நீக்கி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வை தரும்.. மனதில் இருக்கும் பலவீனத்தை அடக்கி பலத்தை உண்டாக்கும். மனவலிமையை அதிகரிக்கும்.. நடைபயிற்சியும், உடற் பயிற்சியும் எளிதில் தராத சக்தியை ஐந்து நிமிட தோப்புக்கரணம் தந்துவிடும்..

இனி பிள்ளையாரிடம் மட்டுமல்ல வீட்டிலும் தோப்புக்கரணம் போடுங்கள்.. 10 நாட்களில் பலனை உணர்வீர்கள்..  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close