கரீனா கபூர் போன்ற உடல்வாகு வேண்டுமா? இதோ கரீனாவின் உணவுப் பட்டியல்

  கண்மணி   | Last Modified : 14 Apr, 2019 06:50 pm
what-keeps-kareena-kapoor-khan-fit

கரீனா கபூரின், ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவ்கர் தனது இன்ஸ்டாகிராமில்,  கரீனா கபூரின் அழகிற்கான‌ ரகசியம் குறித்து பதிவு செய்துள்ளார். அதில் கரினாகபூரின் உணவு பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருப்பது நமது  பாரம்பரிய, உணவான அரிசி சாதமும், பருப்பும் தான் எனவும்,  அரிசி மற்றும் பருப்பில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இந்த கலவை நல்ல ஊட்டமளிக்கும் உணவாக‌ அமைவதுடன், இந்த உணவை தயாரிக்கும் நேரமும் குறைவு என்கிறார் இவர்.

இதற்கு முந்தைய பதிவில் ருஜுதா, நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை குறித்து பதிவிட்டிருந்தார். அதில், தற்போதைய சூழலில் நெய் அதிக கொழுப்பு உள்ள உணவு என எண்ணி உணவு பட்டியலில் இருந்து விலக்கி வைக்கின்றபனர் சிலர்.  ஆனால்,  உண்மை என்னவென்றால்,  நமது உடல் நலத்தை காக்க கூடிய நல்ல கொழுப்புகளே நெய்யில் அதிகம் உள்ளன, எனவே நெய்யினை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

மேலும் அவர், உங்கள்  தோற்றம் எந்த வயதிலும், இளமையாக இருக்க வேண்டுமா? அதற்கு கரினா கபூரின் உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள் என்கிறார். அப்படி எந்த வகையான உணவு முறையை கரீனா கடைபிடிக்கிறார் தெரியுமா?  நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும், கரீனா எப்பொழுதும், தான் இருக்கும் இடங்களில் கிடைக்கும் உணவுகள், அந்தந்த பருவகாலங்களில் கிடைக்க கூடிய உணவுகள், வீட்டில் சமைக்கப்பட்ட‌ உணவு மற்றும் விலை குறைவான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே உட்கொள்வார் என கூறுகிறார்.

கரீனா கபூர் கட்டுடலுடன் இருப்பதற்கான, காரணங்களை தொடர்ந்து சொல்லும் ருஜுதா திவ்கர், எப்பொழுதும் சாதரண உணவுகளையே தனது  உணவு பட்டியலில் வைத்திருக்கும் கரீனா, சரியான நேரத்திற்கு, சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது , சரியான நேரத்தில் பணிக்கு செல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தனது ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிப்பதும் அவரின் அழகிற்கான ரகசியம் என்கிறார்.

ருஜுதா திவ்கர் பருவகால பழங்களைப் பற்றி கூறும் பொழுது, முக்கியமாக கவனிக்க வேண்டியவை என சிலவற்றை கூறுகிறார், அவை: பருவகால பழங்கள் விளையும் இடத்திலிருந்து, அறுவடை செய்யும் நேரங்களில் நேரடியாக வாங்கி சாப்பிட வேண்டும், உதாரணமாக, மாம்பழங்கள், முலாம்பழம்கள், ஸ்ட்ராபெர்ரிகள் உள்ளிட்டவை எல்லா பருவகாலங்களிலும், மார்கெட்டுகளில் கிடைக்க கூடியவை, ஆனால் அவற்றை சாப்பிட சிறந்த நேரம் எது? என குறிப்பிட்டுள்ள அவர், பருவகால பழங்களை, விளைந்த இடங்களிலிருந்து நேரடியாக வாங்கி சாப்பிடுவதினால் மட்டுமே, அதன் ஊட்டச்சத்துக்கள் அனைத்து நமக்கு முழுமையாக கிடைக்கும் என்கிறார்.  மேலும், தினசரி போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதனாலும், நமது பாரம்பரிய உணவு வகைகளை எடுத்துக்கொள்வதனாலும், கரீனா போன்று, என்றும் இளமையுடன் இருக்காலாம் என பதிவிட்டுள்ளார் ருஜுதா திவ்கர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close