நீண்ட ஆயுள் வேண்டுமா? அதற்கு சிறந்த உணவு கார்போஹைட்ரேட்

  கண்மணி   | Last Modified : 18 Apr, 2019 03:56 pm
carbohydrate-benefits

கார்போஹைட்ரேட்டுகள் பல்வேறு வகையான உணவுப்பொருட்களில் காணப்படுகின்றன. முக்கியமாக கோதுமை, சோளம், அரிசி போன்ற தானியங்கள், உருளைக்கிழங்கு,சர்க்கரைவள்ளி கிழங்கு, கரும்பு, பழங்கள், பால், உள்ளிட்ட உணவுகளில் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் இருக்கும் நார்ச்சத்துகள் நமது உணவில் முக்கியமாக இருக்க வேண்டியவை. மேலும், இது செரிமானத்திற்கு அவசியாமான உணவாக இருக்கிறது.

இத்தகைய கார்போஹைட்ரேட்டை, சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்பது மட்டுமே நமக்கு தெரியும் ஆனால், கார்போஹைட்ரேட் சாப்பிடாவிட்டால்,  நாம் எவ்விதமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பார்க்கலாம்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைந்து, விரைவில் சோர்வடையும் நிலை உண்டாகும். மேலும் உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போய்விடுமாம்.

கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடாவிட்டால், மூளைக்கு செல்லக்கூடிய ஆற்றல் குறைகிறது. இதனால், மூளைசோர்வு ஏற்ப்படுவதுடன், வாய் துற்நாற்றம், உடல் வலிமை குறைதல், குமட்டலுணர்வு, தூக்கமின்மை, காய்ச்சல், போன்ற அரோக்யம் சார்ந்த பிரச்னைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

நீரிழிவு , உடல் எடை அதிகரித்தல், இதயம் சம்மந்தமான பிரச்னைகள்  கார்போஹைட்ரேட் உணவுகள் குறைக்கப்படுவதால் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உடலுக்கு தேவையான, கார்போஹைட்ரேட்டுகள் கிடைக்காத பட்சத்தில், சரியான முறையில் செரிமானம் நிகழாமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பெரும்பாலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, 'கார்போஹைட்ரேட்' தவிர்க்கப்பட வேண்டும் என்கிற கருத்து நிலவி வருகிறது. உண்மையில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களை கொண்ட கார்ப்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ளாவிட்டால், உடற்பயிற்சி செய்வ‌தற்கான எந்த பலனும் கிடைக்காதாம்.

கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதனால் நீண்ட நேரம் பசியை தாங்கி, உடல் எடையை குறைக்க முடியும்.

நீண்ட ஆயுள் வேண்டுமானால், கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, அங்கு வாழும் பெரும்பாலான மக்கள் 100 வயதிற்கு மேல் வாழ்கின்றனராம், அதற்கு காரணம் அவர்களின் உணவு பட்டியளில் இருக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளே என கூறப்படுகிறது. .


இயற்கை உணவுகளில் இருக்கும், கார்போஹைட்ரேட்டுகள்  எந்த விதத்திலும், உடலுக்கு கேடு விளைவிக்காது, மாறாக ஜங் புட், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட கிழங்கு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகளே உடலுக்கு தீங்கை விளைவிக்கின்றன‌. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close