தற்கொலைக்கு சமமாம் காலை உணவை  தவிர்ப்பது

  கண்மணி   | Last Modified : 18 Apr, 2019 08:48 pm
skipping-breakfast-and-night-dinner-may-increase-death-risk

ஐரோப்பிய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின் படி இரண்டு வகையான உணவு பழக்கங்களை கொண்டவர்களின் ஆயுள் மிக குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆதாவது காலை உணவை தவிர்ப்பவர்கள், தமதமாக இரவு உணவை எடுத்துக்கொள்பவர்கள். 

காலையில் அதிக உணவு சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும், உடல் புத்துணர்வின்றி இருக்கும் என எண்ணி பலர் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் இளம் வயதினர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதாக எண்ணி, காலை உணவை எடுத்துகொள்வதே இல்லை.  இன்னோரு சாரார் மிகக்குறைந்த அளவே காலை உணவை சாப்பிடுகின்றனர்.

உண்மை என்னவென்றால், காலை நாம் சாப்பிடும் உணவே, அந்த நாள் முழுவதம் நாம் செயல்பட தேவையான ஆற்றலை உடலுக்கு தருகிறது. காலை உணவாக பால் சார்ந்த உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், சத்துக்கள் நிறைந்த பழங்கள் உள்ளிட்டவற்றையே காலை உணவாக‌ எடுத்துக்கொள்ள வேண்டுமாம். 

அதேபோன்று, இரவு உணவு சாப்பிடுவதற்கும், தூங்க போவதற்கும் இடையில் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டுமாம். மேலும் இரவு உணவு விரைவில் செரிமானம் ஆகக்கூடிய, கொழுப்புக்கள் குறைந்த உணவாக இருக்க வேண்டுமாம்.

இவ்வாறான, உணவு பழக்கத்தை பின்பற்றாவிட்டால். மிக விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதன்படி, ஐரோப்பா மற்றும் ப்ரேஷிலை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டுள்ளன. சுமார் 60 வயதுடைய 113 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் படி  (STEMI) எனப்படும் இதய கோளாரால் 73 சதவீதம் பேர் மர‌ணத்தை சந்திக்கின்றனர்.

இதற்கான, பொது காரணமாக இருப்பது காலை உணவை தவிர்ப்பதும், இரவு தாமதமாக உணவு உட்கொள்வதாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த முறையற்ற  உணவு பழக்கத்தால், உடல் பருமன் அதிகரித்தல், இதய தமணிகளில் கொழுப்பு சேருதல், மற்றும் நீரிழிவு நோய் போன்ற ஆபாய உடல் பிரச்னைகளை சந்திக்க நேரிடுமாம், ஆக, காலை உணவை தவிர்ப்பது தற்கொலைக்கு சமமாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close