உடல் பருமனை குறைக்கும் வாசனை குடிநீர்!

  கண்மணி   | Last Modified : 16 May, 2019 05:51 pm
cardamom-water-benefits

நமது சமையலறையில் இடம் பிடித்துள்ள வாசனைப்பொருள் ஏலக்காய். ஏலக்காய்செடி, இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடியினம். மிகச்சிறிய அளவில் இருக்கும் இந்த ஏலக்காய் எண்ணிலடங்காத‌ பல நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. 

ஏலக்காய் பல் மற்றும் அதனை சார்ந்த பிரச்னைகளை சரி செய்கிறது. செரிமானத்தை தூண்டி, ஆரோக்ய உடல் எடையை கொடுக்கிறது, உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளது.

தொண்டை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது ஏலக்காய்.

மலட்டு தன்மை மற்றும் ஆண்மைக் குறைவு போன்ற மிகப்பெரும் பிரச்னைகளையும் குறைக்கக் கூடியது ஏலக்காய். 

ஏலக்காயில் இருக்கும் "பிசபோலீன்" எனப்படும் வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி வலிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுவதை குறைக்கிறது. 

ஆஸ்துமா நோயாளிகளுக்கான சிறந்து மருந்து ஏலக்காய். இதனை சாப்பிடுவதால் சுவாச கோளாறுகள் நீங்கும். தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற தொந்தரவுகளை விரைவில் சரி செய்யும் தன்மையை கொண்டது ஏலக்காய். நெ‌ஞ்‌சு சளியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வை கொடுக்கிறது ஏலக்காய்.

உடல் பருமனை குறைக்க கூடிய ஏலக்காய் தண்ணீரைப் பற்றி பார்ப்போம்;

ஏலக்காய் கலந்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புக்கள் விரைவில் கரைந்து, உடல் பருமன் கட்டுக்குள் வரும்.

தேவையான பொருட்கள்:

4லிருந்து 5 ஏலக்காய், ஒரு டம்ளர் தண்ணீர்

செய்முறை: ஏலக்காய்களை உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏலக்காய் விதைகளை  சாப்பிட  வேண்டிய‌ அவசியம் இல்லை. தினசரி உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடோடு இந்த நீரை குடித்து வர விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close