தாய் தந்த வரம் பால்: உலக பால் தினம்(1ஜூன்) 

  கண்மணி   | Last Modified : 06 Jun, 2019 08:27 am
world-milk-day-1-june-2019

பால் தாயிடம் இருந்து குழந்தைக்கு ஊட்டப்படும் முதல் உணவு, இத்தகைய பால் மிகவும் புனிததன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இதில் இயற்கையான  கால்சியம், பொட்டாசியம், புரதம், லாக்டோசு எனப்படும் இயற்கை சர்க்கரை போன்ற  ஊட்டச்சத்துக்கள்  உள்ளடங்கியுள்ளன.   மாடு, எருமை, ஆடு, ஒட்டகம், குதிரை  போன்ற வேளாண் விலங்குகளிடமிருந்து உணவுக்காக பால் பெறப்படுகிறது. இந்த பாலில் வேதியல் மாற்றங்கள் செய்வதன் மூலம் பாலிலிருந்து பல உபப்பொருட்களைப் பெறலாம்.  அதாவது பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், தயிர் பெறப்படுகிறது. பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெயும், மோரையும் பெறலாம். வெண்ணெயைக் காய்ச்சி நறுமணமும் சுவையும் மிக்க நெய்யை பெறலாம்.

பாலை நொதிக்கச் செய்வதன் மூலம் பாலாடைக்கட்டியையும் பெற இயலும். இன்றைய அளவிலும் பால் வணிகம் மிகப்பெரிய தொழிலாக கருதப்பட்டு வருகிறது. தொழில் பெருக்கத்தால் பாலில் கலப்படமும் அதிகரிக்க துவங்கி விட்டது.  சுத்தமான பாலை கட்டாயம் அருந்த வேண்டிய தேவை என்ன என்பதை பார்க்கலாம்:

பெண்களுக்கு 45 வயதிற்கு மேல்  மாதவிடாய் நின்றுவிடும். அத்தகைய சூழ‌லில் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாலில் உள்ள லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப்புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது.

பாலூட்டும் தாய்மார்கள் தினமும் இரண்டு வேளைகள் பால் அருந்துவதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வயது முதிர்வின் போது எலும்பு தேய்மானம் ஏற்படும்.  இதனை தவிர்க்கவும் எலும்புகளை பலப்படுத்தவும் தினமும் பால் குடிக்க வேண்டும்.

 உடல் பருமன், இரத்தக் கொதிப்பு, இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் பாலை தினமும் அருந்த வேண்டும்.

பாலிலுள்ள  வைட்டமின் பி12 , நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது.

தினமும் இரவில்  பால் குடித்துவிட்டு உறங்க சென்றால் நல்ல ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.

பாலில் உள்ள பொட்டாசியம்  இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

இன்னும் எண்ணற்ற நன்மைகளை கொண்ட பால் வியாபார நோக்கத்தால் செயற்கை உணவாக மாற்றப்பட்டுவிட்டது. ஊசியின் மூலம் இயற்கைக்கு மாறாக 15 மாதங்களில் பசுக்கள் விரைவாக வளர்க்கப்பட்டு, அளவுக்கு அதிகமான பால் அவற்றிடம் இருந்து பெறப்படுகிறது. இத்தகைய பாலை அருந்துவதால் நுரையீரல் கோளாறு, மலட்டுத்தன்மை, சுவாசக்கோளாறுகள் சந்திக்க நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள். இயற்கை நமக்கு அளித்த கொடையை பாதுகாத்து இயற்கையான முறையில் உட்கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது.

இன்று உலக பால் தினம்(1ஜூன்) இன்று முதல், இயன்றவரை ஆரோக்யமான முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளிடமிருந்து பெறப்படும் பாலை அருந்துவதன் மூலம்  மிகச்சிறந்த நன்மைகளை அடைவோம். இதன் மூலம் கால்நடை வளர்ப்பை  ஊக்குவிப்பதுடன், பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்யும் கள்ள சந்தையையும் ஒழிக்க முடியும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close