கை, கால் மூட்டுகளின் கருமையை எளிதாக போக்கலாம்…

  தனலக்ஷ்மி   | Last Modified : 04 Jun, 2019 05:00 pm
the-hand-the-calm-of-the-chronicles-can-be-easier

நல்ல  நிறமாத்தான்  இருக்கேன். ஆனா இந்த கை, கால் மூட்டு மட்டும் கருப்பா இருக்கு என்று. சொல்வார்கள்.   வெள்ளையாக இருப்பவர்கள் மட்டுமல்ல மாநிறங்களில் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்னைகள் உண்டு. பெரும்பாலும் இந்த புலம்பலை பெண்களிடமே அதிகம் எதிர்பார்க்கலாம்.

குழந்தைகள் தவழும் பருவத்தில் கால் மூட்டுகளில் அதிக அழுத்தம் கொடுப்பதால் அது வளரும் போது முட்டி ஒரு நிறமாகவும், கால்கள் ஒரு நிறமாகவும் பார்க்க வித்தியாசத்தைக் கொடுக்கிறது.  வளரும் போது நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது இந்த இடத்தில் சருமம் வறண்டு இறந்த செல்களை இங்கேயே தேக்கி வைத்துக்கொள்கிறது. இதனால் இந்தப் பகுதி கடினமாகவும் கருமையாகவும் மாறிவிடுகிறது.

வளர்ந்த பருவத்தில் அதிகரிக்கும் இந்த மூட்டு கருமை பாதிப்பை எளிதில் சரி செய்ய முடியாது என்றாலும் வீட்டு வைத்தியம் செய்து நாளடவில் மூட்டில் இருக்கும் கருமையை முழுமையாக நீக்கி விடலாம். மூட்டுக்களை மென்மையாக்கினாலேயே கருமை அகன்று பளிச்சென்று இருக்கும். 

மூட்டுபகுதிக்கு முதலில் தேவை  இரத்த ஓட்டத்தை சீராக்குவதுதான். மூட்டுப் பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்கலாம். இரத்த ஓட்டம் சருமத்துக்கு மென்மையைக் கொடுத்து கருமையைப் போக்கும்.

இரவு நேரங்களில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், விட்டமின் ஏ (மாத்திரைகளில் கிடைக்கும்) எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெயை ஒரு டீஸ்பூன் எடுத்து உள்ளங்கைகளால் தடவி மூட்டுகளைச் சுற்றிதடவி மசாஜ்  செய்யவும். மசாஜ் செய்யும் போது மேலிருந்து கீழாக கைகளை கொண்டு வராமல் கீழிலிருந்து மேலாக வட்டமாக மெதுவாக 10 நிமிடங்களுக்கு குறையாமல் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள்  உருவாகும். இரத்த ஓட்டமும் சீராகும்.

 சோற்றுக்கற்றாழையின் நுங்கு போன்ற சதையை எடுத்து குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு கை, கால் மூட்டுகளில் மசாஜ் போல் தேய்த்து அரைமணி நேரம் கழித்து பாசிப்பருப்பு மாவு போட்டு தேய்த்து குளித்தால் 10 நாட்களில் பலன் தெரிய ஆரம்பிக்கும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி சர்க்கரை தொட்டு மூட்டுகளில் ஸ்க்ரப் போல் செய்து வந்தாலும் கருமை மறைந்து சருமம் மென்மையாகும். கை மற்றும் கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை தேன் மசாஜ் செய்தும் போக்கலாம்.

கிச்சன் மசாலாக்களில் அடைந்திருக்கும் கடுகுவை எடுத்து கால்மணி நேரம் ஊறவைத்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்து பற்று போட்டாலும் மூட்டுகளின் கருமை நாளடைவில் மறையும். பளபளப்பாகும். நிறமாற்றங்களை அழிக்கும்.  நல்ல சாறுள்ள உருளைக்கிழங்கு  எடுத்து பாதியாக வெட்டி  கை, கால் மூட்டுகளில் அழுத்தி தேய்க்கவும். சாறு இறங்க இறங்க மூட்டுகளில் மென்மை உண்டாகும். அடர்ந்த கருமை நிறமும் மறையும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

அழகு நிலையங்களில் பாதங்களுக்கும், கைகளுக்கும் பெடிக்யூர், மெனிக்யூர் செய்து கொள்ளும் நாம் கை, கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை  சில நேரங்களில் கவனிக்க தவறிவிடுகிறோம். இதற்கு பிரத்யேகமாக நேரம் செலவழிக்க தேவையில்லை. கொடுத்துள்ள குறிப்புகளை வாரம் ஒரு நாள் கடைப்பிடித்தால் போதும் மூட்டுகள் கருமை மறைந்து மினு மினுக்கும்..

எங்கே உங்களது மூட்டுகளைப் பாருங்கள். கருமையாகத்தானே இருக்கிறது.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close