ஆஸ்துமா எனப்படும் சுவாச நோய்

  கண்மணி   | Last Modified : 05 Jun, 2019 05:30 pm
most-common-asthma-triggers

ஆஸ்துமா எனப்படுவது மூச்சு விடுவதில் தடை ஏற்படுவதாகும். இது பொதுவாக மூச்சு குழாயில் ஏற்படும் வீக்கத்தால் மூச்சு காற்று உள் செல்லும் போதும் வெளிவரும் போதும் ஏற்படும் சிரமமாகும். இது நுரையீரலில் ஏற்படும் தொற்று , நோய் ஆகியவற்றாலும் ஏற்டலாம் . ஆஸ்துமாவை உண்டாக்கும் காரணிகளை பற்றி பார்க்கலாம்.

 வீட்டில் இருக்கும் தூசி:

பெரிம்பாலும் வீட்டில் இருக்கும் தூசுக்களால் சுவாசப்பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே முடிந்தவரை வீட்டில் தூசி சேரமால் பார்த்துகொள்ள வேண்டும். அதோடு தலையணை உறை மற்றும் பெட்ஷீட்களை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

வளர்ப்பு பிராணிகள் மூலம்:

ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள், வளர்ப்பு பிராணிகளிடமிருந்து தள்ளி இருப்பது மிகவும் அவசியம். இத்தகைய வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற வற்றின் முடி, எச்சில் போன்றவற்றால் அஸ்துமா திகமாகும் வாய்ப்புக்ள் உள்ளன.

புகைப்பிடிப்பதால்:#

புகைப்பிடிப்பதால் நுரையிரல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் இன்னொருவரின் சிகரெட்டை  புகைக்கும் பொழுது அந்த நபர் ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் பயன்படுத்திய சிகரெட்டை புகைக்கையில் ஆஸ்துமா பரவும்.

கரப்பான் பூச்சிகள்;

கரப்பான் பூச்சிகளால் அஸ்துமா பரவும் ஆபாயம் அதிகம். கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களை வரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது  சுத்தம் செய்ய வேண்டும்.

அதிக புகையுள்ள இடங்கள்:

தீப்பிடித்தைடங்களில், உதரணமாக மரங்கள் மற்றும் புற்களில் தீப்பிடிக்கும் போது அதிகப்படியான புகை ஏற்படும் இதிலிருந்து வரும் கேஸ் நுரையீரல் பதிப்பை உண்டாக்க கூடிய அபாயம் கொண்டவை எனவே அத்தகைய இடங்களை தவிர்க்க வேண்டும்.

வாகனப்புகை:


சாலைகளில் செல்லும் கார், பேருந்து போன்ற வாகனங்களிலிருந்து வரும் புகையால் ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே வெளியில் செல்லும் பொழுது  முகத்தை மூடி செல்வது சிறந்தது.

மூச்சை அடக்கும் உடற்பயிற்சிகள்:


ஆஸ்துமவால் பாதிக்க ப்பட்ட நபர்கள் மூச்சை நீண்ட நேரம் அடக்கி வைக்க கூடிய உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்ப்பது நாலது. நீண்ட நேரம் மூச்சை அடக்குவதால், மூச்சு குழலின் வீக்கமதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

சைனஸ் பிரச்னை உள்ளோர்:

சைனஸ் பிரச்னை உள்ளோர் மற்றும் சளி தொல்லை உள்ளவர்களிடமிருந்து ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு தொற்று வேகமாக பரவி விடும் எனவே அத்தகைய பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close