உடல் உபாதைகளை அதிகரிக்கும் செரிமானக் கோளாறுகள்..சரி செய்வது எப்படி?

  தனலக்ஷ்மி   | Last Modified : 05 Jun, 2019 08:38 pm
how-to-fix-digestive-disorders

உறங்குவதும் உண்பதும் மனிதர்களின் அன்றாட பழக்க வழக்கங்கள் மட்டுமல்லஅத்தியாவசியமான பழக்கமும் கூட. பகலைத் தொடர்ந்து இரவு வருவது போலவே அன்றாடம் மூன்று வேளையும் உணவு உண்பதும் கட்டாயமாக்கி கொள்கிறோம். காலைடிபன், மதிய உணவுஇரவு அவரவர்களுக்கு பிடித்தமாதிரி டிபன் அல்லது உணவு என்று வேளை தவறாமல் எடுத்துக் கொண்டால் தான் உடல்ஆரோக்யமாக இருக்கும் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொருவேளை உணவுக்கும் இடைப்பட்ட நேரங்கள் உண்ட உணவை செரிமானம் ஆக்கிவிடும் வரை உடல் எந்தவித சிக்க லையும் பெறுவதில்லைஆனால் ஒருவேளை உணவு செரிமானம் ஆகாவிட்டாலும் அவஸ்தைதான்செரிமானக் கோளாறுகள் அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு உபாதைகளும் உண்டாகின்றனவயிறு எரிச்சல்புளி ஏப்பம், வயிறு வலிநெஞ்செரிச்ச லாக இருப்பதுவாயு கோளாறு இவையெல்லாம் செரிமானக் கோளாறால் உண்டாகக்கூடியவையே.

இப்போது அனைவருக்கும்  செரிமானப் பிரச்னைகள் இயல்பாகவே இருக்கிறது. உணவு சமைக்கும் போதோ சாப்பிடும் போதோ  இவை  செரிமான பிரச்னையை உண்டாக்கிவிடுமோ என்று பயந்தே பலரும் சில நேரங்களில் உணவைத் தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆனால் செரிமானம் சுலபமாக நடக்க இயற்கை உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உண்ணும் உணவு உமிழ்நீரோடு கலந்து நன்றாகமென்று கரைந்து வயிற்றுக்குள் போனால் செரிமானம் எளிதாகும். செரிமானத்தைத் தூண்டும் அமிலம்கல்லீர லில் சுரக்கும் நொதி. இது மூன்றையும் சீராக்கி இதன் சுரப்பை அதிகரிக்க செய்கிறது நம் வீட்டு அடுப்படியில் இருக்கும் இஞ்சி.

உண்ணும் உணவில் அவ்வப்போது செரிமானத்தை எளிதாக்கும் இஞ்சியை சேர்த்துவருவது நல்லது.   டீ குடிக்கும் போது இஞ்சி தட்டி போட்டு குடிக்கலாம். வெண் பொங்கல் செய்யும் போது தாளிப்பில் இஞ்சியைச் சிறுதுண்டுகளாக நறுக்கி சேர்ப்பார்கள். மந்தத்தன்மையை நீக்கி செரிமானத்தை எளிதாக்கும் என்பதாலேயே இஞ்சியை அதிகம் பயன்படுத்த தொடங்கினார்கள். செரி மானப் பிரச்னை இருப்பவர்கள் வாரம் ஒரு முறை புதினா துவையலை சாப்பிட்டு வரலாம்.  

பொதுவாக அசைவ உணவு உண்பவர்களுக்குத்தான் செரிமானம் ஆவதில் தாமதம் ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால்  மாறி வரும் உணவுப்பழக்கங்களால் செரிமானக் கோளாறுகளும் சகஜமாகிவருகிறது. சாப்பிட்டு முடித்ததும் இலேசான சூட்டில் வெந் நீரை பருகினால் செரிமானம் எளிதாகும்அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை  வெந்நீர் நீக்கிவிடும்வெந்நீரோடு சிறிது சீரகம் கலந்தும் குடிக்கலாம். மலக்குடலில் உண்டாகும் வீக்கத்தை கட்டுப்படுத்தும்.

செரிமானப் பிரச்னையால் வயிறு மந்தமாக இருந்தால் வெந்நீரில் ஓமம் கலந்து குடிக்கலாம். இவை தவிர உணவில் சேர்க்க பயன்படும் பொருள்களான மஞ்சள், பட்டை, இலவங்கம்,வெந்தயம், ஜீரண சக்தியை அதிகரிக்க தூண்டும் பழவகைகள் போன் றவற்றை அதிகம் பயன்படுத்தினாலே செரிமான ஏப்பம் ஏகாந்தமாக வரும்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close