"கெடொ டயட்" வகை இந்திய உணவுகள்!

  கண்மணி   | Last Modified : 09 Jun, 2019 11:17 pm
keto-diet-with-an-indian-food

இன்றைய சூழலில் டயட் என்பது பரவலாக பின்பற்றக்கூடிய விஷ‌யமாகிவிட்டது. அதிலும் டயட்டில் பல ரகங்களும் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் கெடொஜெனிக் (Ketogenic) டயட். 1920 காலப் பகுதியில் உருவானது. நரம்பியல் வைத்தியர் ஹென்றி க்ஹைய்லைன்  கெடொ டயட் முறையை அறிமுகம் செய்தார். பொதுவாக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் மட்டுமே இந்த டயட்டில் பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளில் பின்பற்றப்படும் இந்த டயட்டை நம் நாட்டு உணவு முறைகளை கொண்டு எவ்வாறு பின்பற்றி உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள முடியும் என பார்க்கலாம்.

பாலக் பன்னீர்:

பாலக் பன்னீர் பிரபல இந்திய உணவு . பாலக்கீரை மற்றும் பன்னீர் கொண்டு செய்யப்படும் இந்த உணவில் அதிகமான இரும்பு சத்துக்கள் உள்ளன. இந்த உணவை கெடொ டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை:

முட்டை, வெங்காயம், காரம் சேர்த்து கெடொ டயட் பின்பற்றுபவர்கள் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். முட்டை கெடொ டயட்டிற்கு மிக உகந்த உணவாகும்.

தந்தூரி:

தந்தூரி உணவுகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளாகும். தந்தூரி முறையில் சமைக்கப்பட்ட சிக்கனை வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறுடன் உட்கொள்ளலாம்.  வெஜிடேரியன்ஸ் சிக்கனுக்கு பதிலாக பன்னீர் தந்தூரி செய்து சாப்பிடலாம். இந்த  முறை உணவு கெடொ டயட்டிற்கு மிக உகந்த உணவாகும்.

வெண்ணெய் கடுகு கீரை: 

பிரபல பஞ்சாபி உணவு  முறையான கடுகு கீரையுடன் வெண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் உணவை எடுத்துக் கொள்ளலாம். இதில் குறைந்த அளவு கார்ப் இருப்பதுடன் நல்ல கொழுப்புக்களை உடலுக்கு கொடுக்கிறது.

பட்டர் காபி:

பட்டர் , தேங்காய் எண்ணெய் மற்றும் புதிய காபி கொட்டைகள் மூலம் தயாரிக்கப்படும் காபி கெடொ டயட்டுக்கான உணவாகும். இந்த காபி நீண்ட நேரம் பசியை தாங்கும் தன்மை கொண்டது. மேலும் இதில் நல்ல கொழுப்புகள் அதிகப்படியாக இருப்பதால் கெட்ட கொழுப்புக்களை எளிதாக எரிக்க முடியும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close