சைவ புரதங்களால்  உடல் பருமனை குறைக்க முடியுமா?

  கண்மணி   | Last Modified : 10 Jun, 2019 05:58 pm
high-protein-veggies-for-quick-weight-loss

அசைவ உணவுகள் மட்டுமே அதிக புரதச்சத்து நிறைந்தவை என நம்மில் பலர் எண்ணம் கொண்டுள்ளோம். உண்மையில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத புரத உணவுகள் சைவத்தில் தான் அதிகம்.  

நம்முடைய சிறு வயதில் பெரும்பாலும் சைவ புரதங்களை உட்கொண்டிருப்போம். ஆனால் பெரியவர்கள் ஆனவுடன் நாவிற்கு மட்டும் சுவை பயக்கக் கூடிய ஜங் புட், பாஸ்ட் புட் போன்ற துரித உணவுகளை நாடிச் சென்று உடல் பருமன், நீரிழிவு, இதய கோளாறு போன்ற அபாய‌ங்களை பரிசாக பெற்று வருகிறோம்.

இவ்வாறு  துரித உணவுகளால் உடல் பருமனால் அவதிப்படுபவ‌ர்களுக்கு ஒரு மறுவாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். அதாவது பின் வரும் புரதம் நிறைந்த சைவ உணவுகளை உங்கள் தினசரி உணவு பட்டியலில் முதலிடத்தில் வைப்பதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியுமாம்.

சோயா பீன்ஸ் காய்கள்:


சோயாபீன்ஸ் காய்களில் 100 கிராமிற்கு 11 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஃபைபர், நல்ல கொழுப்பு, ஒமேஹா 3, வைட்டமின் சி மற்றும் கே, இரும்பு சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இந்த காயை அடிக்கடி சாப்பிட்டு வருவதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைந்து ஆரோக்கியமான முறையில் உடல் பருமனை குறைக்க முடியும்.   

பச்சை பட்டாணி:


பச்சை பாட்டாணி புரதம் நிறைந்த சைவ உணவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 100 கிராம் பட்டாணியில் கிட்டத்தட்ட 5 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்துள்ளது. இது குறைந்த கலோரிகளையும், நிறைந்த வைட்டமின் ஏ மற்றும் கே வையும் கொண்டுள்ளது.

காளான் வகைகள்:

பூஞ்சைத் தாவர குடும்பத்தை சேர்ந்த காளான், மிகவும் ருசி மிகுந்த உணவாக உலகமெங்கும் பயன்படுத்தப் படுகிறது. 100 கிராம் காளானில் 3.1 கிராம் புரதம் உள்ளது.  காளான்கள் குறைந்த கலோரிகள் கொண்டதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. மேலும் இந்த காளானை உங்கள்  உணவு பட்டியலில் சேர்ப்பதன் மூலம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்கள் கரைவதை உறுதி செய்ய முடியும். 

காலிஃபிளவர் கீரை :


பொதுவாக காலிஃபிளவர் நல்ல புரத சத்து நிறைந்த உணவாகும். அதிலும் அதன் இலைகள் பூவை விட மிகுந்த புரதம் நிறைந்ததாக உள்ளன. 100 கிராம் கீரையில் 3 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கீரைகள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

கீரை வகைகள்;


100 கிராம் கீரையில் 2.9 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்துள்ளது. மேலும் கீரைகளில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேராமல் தடுக்க முடியும்.

ப்ரோக்கோலி:


முட்டை கோசு குடும்பத்தை சேர்ந்த  ப்ரோக்கோலியின் தண்டுகள் மற்றும் பூக்களும் உண்ணக்கூடியவை.  இவை 2.8 கிராமிற்கு அதிகமான புரத சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன. குறைந்த கலோரிகளை கொண்ட ப்ரோக்கோலி உடல் பருமனை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

வாட்டர் க்ரஸ்:


வாட்டர் க்ரஸ் எனப்படுவது ஓடை போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் வளரக்  கூடிய கீரை வகையாகும். பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த உணவுப்பொருளில் அதிகமான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. மேலும் 100 கிராம் வாட்டர் க்ரஸுல்  2.3 கிராம் புரதம் நிறைந்துள்ளது.  இது பெரும்பாலும் மத்திய தரைக்கடல் உணவுகளில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. இந்த உணவுப் பொருட்களை நம் தினசரி உணவு பட்டியலில் சேர்ப்பதன் மூலம் விரைவில் உடல் பருமனை குறைக்க முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close