யோகா செய்வதால் இவ்வளவு நன்மைகளா..?

  முத்துமாரி   | Last Modified : 16 Jun, 2019 11:17 am
what-are-the-benefits-of-yoga

நமது முன்னோர்கள் நமக்கு விட்டுசென்றவைகளில் முக்கியமான பாரம்பரியமான ஒரு கலை யோகா. சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே யோகா கலை இருந்து வருகிறது. 

யோகா செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.. 

►  யோகா, உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

►  யோகாவில் மூச்சுப்பயிற்சி தான் அடிப்படையாக இருப்பதால் சுவாசம் சீராக இருக்கும். இதன்மூலம் உங்களது ஆயுட்காலமும் நீடிக்கும். நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

►  யோகா தினமும் தவறாமல் செய்யும் போது நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு ஓடிவிடும். கோபம், பொறாமை, பேராசை உள்ளிட்ட கெட்ட எண்ணங்கள் நம்மை விட்டு அகலும். 

►  இது தவிர, யோகா செய்யும் போது அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். மேலும், செய்யும் செயல்களில் அதிக ஈடுபாடு காட்டவும், அதில் வெற்றி பெறவும் யோகா வழிவகுக்கிறது.

►  யோகா செய்வதால் உடல் எடை குறையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அகலும் போது, உடலும் அதற்கு ஏற்றாற்போல் சீராக இயங்குகிறது. உடலில் உள்ள பிரச்னைகளுக்கும் சரியாகி உடல் கட்டுக்கோப்பாக மாறுகிறது. எனவே உடல் எடையை குறைக்க யோகாவும் சிறந்த வழி.

►  நீங்கள் எவ்வளவு நேரம் யோகா செய்கிறீர்களோ, அதைப் பொறுத்து உங்கள் உடல் எடை குறையும் என்பது கூடுதல் தகவல். உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உணவுக் கட்டுப்பாடும் மிகவும் அவசியம். 

►  யோகா செய்யும்போது உடல் பாகம் அனைத்தும் இரத்த ஓட்டம் சீராக இயங்குகிறது. இதனால் சருமம் பொலிவு பெறுகிறது.

►  யோகா ஒரு சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. மூச்சுப் பயிற்சி செய்வதால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும். இதயம் சம்பந்தமான நோய்கள், நுரையீரல் பிரச்சினைகள் அகலும். 

►  மேலும், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் ஒரு கருவியாக யோகா இருக்கிறது. அதேபோன்று ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்னைகளுக்கு ஏற்றவாறு யோகாசனங்களை செய்தால் அவர்கள் அந்த பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

►  ஆண்களைவிட பெண்களுக்கு அதிக மனஅழுத்தம் இருக்கும். எனவே, இவர்கள் யோகா செய்வதன் மூலம், மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.

►  பெண்கள் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கவும், யோகா செய்யலாம். யோகா செய்வதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியிலிருந்து விடுபட முடியும். கர்ப்பப்பை வலுப்படுத்துவதற்கான ஆசனங்களும் நிறைய இருக்கின்றன. 

►  கடுமையான வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தத்தில் வேலை செய்பவர்கள் யோகாசனம் செய்தால் அவற்றிலிருந்து விடுபட முடியும். அதன் பின்னர் கடினமான வேலைகள் கூட உங்களுக்கு எளிதாக தோன்றும்.

►  ஒட்டுமொத்தமாக நாம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று யோகா செய்வது அவசியம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close