செல் போனை அதிக நேரம் பயன்படுத்தினால், தலையில் கொம்பு முளைக்கும்... அதிர்ச்சி தகவல்

  கண்மணி   | Last Modified : 22 Jun, 2019 03:15 pm
if-the-cell-phone-is-used-too-much-time-horn-sprouting-on-the-head

செல் போன் நமது நாகரிக வாழ்க்கை ஓட்டத்தில் ஒன்றாகி விட்டது. உலகமே நம் கைக்குள் அடக்கம் என சொல்லும் அளவிற்கு செல் போன்களின் பயன்பாடு பல்கி பெருகிவிட்டது. அதிலும் ஸ்மார்ட் போன் இல்லையென்றால் கௌரவ குறைச்சலாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த செல்போன்களின் அதிவேக வளர்ச்சியை போலவே இதனால் ஏற்படும் பிரச்னைகளும் மிக மோசமாகத்தான் விஸ்பரூபம் எடுத்து வருகிறது.

அதன் படி சமீபத்தில்  செல் போன் அபாயம் தொடர்பான ஆராய்ச்சியை,  ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வின் முடிவில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாக உள்ளது. 

அதாவது, நீண்ட நேரம்  செல்போன்களை குனிந்தபடி பயன்படுத்துவதால் மண்டை ஓட்டின் பின்புறம்  தலையின் மொத்த எடையும் சுமத்தப்படுகிறது. இதனால் தசை நார்கள் வளர்ச்சியடைந்து பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக''  கண்டறிந்துள்ளனர். ஆக செல் போன் பயன்பாட்டால் புத்தி கூர்மை மட்டுமல்ல தற்போது கொம்பும் பெற முடியும் என தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close