பருவமடைவதற்கு முன் குழந்தைகள் சந்திக்கும் அறிகுறிகள்

  கண்மணி   | Last Modified : 22 Jun, 2019 05:17 pm
symptoms-that-children-encounter-before-puberty

பூப்பெய்தல் அல்லது பருவமடைதல் என்பது சிறு பிள்ளை பருவத்திலிருந்து முதிர்ச்சி அடையும் தருணம் என்றே சொல்லலாம். இந்த தருணத்தை எட்டும் பொழுது பிள்ளைகள் பல்வேறு மன மாற்றம் மற்றும் உடல் மாற்றத்தை சந்திக்கின்றனர்.  அதோடு பூப்பெய்தல் என்பது இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியை குறிக்கும் செயல்பாடாகும். இந்த சமயங்களில் பிள்ளைகளுக்கு கட்டாயம் பெற்றோர்களின் கவனிப்பும் அரவணைப்பும் தேவைப்படும்.  பருவமடைவதற்கு முன்னர்  சில மாற்றங்கள் பிள்ளைகளிடம் தென்படும்.அதாவது...

பெண் பிள்ளைகள் பூப்பெய்துவதற்கு முன்னர் வெள்ளைபடுதல் ஏற்படும்.

ஆண் பிள்ளை மற்றும் பெண் பிள்ளை இரு பாலருக்கும் பருவமடையும் அறிகுறியாக முகத்தில் பருக்கள் தோன்றும்.

பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் சமயத்தில் அடிவயிற்றில் இறுக்கி பிடிப்பது போன்ற வலியை அடிக்கடி சந்திப்பர்.

பெண் பிள்ளைகளின் மார்பகத்தில் வலியுடன் கூடிய வளர்ச்சி ஏற்படும்.
 

பருவமடையும் தருணத்தில் இருபாலரும் உடல் சோர்வுடன் காணப்படுவார்கள்

அடிக்கடி உணர்ச்சி வயப்படக்கூடிய மனம் சார்ந்த பிரச்சனைக்கு ஆளாவார்கள்.

இருபாலருக்கும் பிறப்புறுப்பின் மேற் பகுதி மற்றும் அக்குளில் முடி வளர்ச்சி காணப்படும்.

சிலருக்கு திடிரென உடல் எடை அதிகரிக்கும்.

எதிர் பாலினத்தவரை பற்றி அடிக்கடி சிந்திப்பார்கள் அல்லது அவர்களைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்கள்.

உங்கள் பிள்ளைகளிடம் மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால், பருவமடைய போகிறார்கள் என்று அர்த்தம் . அவ்வாறான சமயத்தில் நீங்கள் காட்டும் அக்கறையும், அரவணைப்பும் வரும் காலத்தில் உங்கள் பிள்ளைகள் சிறந்தவர்களாகவும்,  நல் ஒழுக்கங்களை கொண்டவர்களாக வாழ உதவும். பெரும் பாலும் பருவ வயதை எட்டிய பிள்ளைகளே தடம் மாறி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close