கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு!

  கண்மணி   | Last Modified : 24 Jun, 2019 06:25 pm
ovarian-cysts-symptoms

பெண்மைக்கு மட்டுமே கிடைத்த சிறந்த பரிசு கர்ப்பபை.  சந்ததிகளின் பெருக்கம் என்பது இந்த ஒற்றை உறுப்பை சார்ந்துதான் இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் நமது முறையற்ற உணவு முறையாலும், வாழ்க்கை முறையாலும் இந்த கர்ப்பப்பையில் பல கோளாறுகளை நாமே உருவாக்கி கொள்கிறோம். அத்தகைய பிரச்சனையில் ஒன்று தான்  நீர்க்கட்டிகள்.

கணக்கெடுப்பின் படி மூன்றில் ஒரு பெணுக்கு கருப்பை நீர்க்கட்டிகளால்  பாதிப்பு ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது. இந்த நீர்கட்டிகள் குழந்தை பெறுவதற்கு தடையாக மட்டுமல்லாமல் புற்று நோய்க்கும் வழி வகை செய்யக்கூடும். நீர்க்கட்டிகள் கருப்பையில் தோன்றும் சிறு சிறு நீர் நிரைந்த கட்டிகளாகும். பெரும்பாலும் இந்த கட்டிகள் இருப்பதற்கான தனிப்பட்ட அறிகுறிகள்  எதுவும் தென்படுவதில்லை.  ஆனால் பின் வரும் அறிகுறிகளின் மூலம் கருப்பையில் நீர் கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

இடுப்பு பகுதியில் திடீரென ஏற்படும் அதீத வலி மற்றும் பாரமாக இருப்பது பொன்ற உணர்வு 

வயிற்றில் திடீரென ஏற்படும் வீக்கம், கருப்பை நீர்கட்டிக்கான அறிகுறையாக இருக்கலாம்.

வயிற்றின் ஒரு பகுதியில் மட்டும் கனமான உணர்வுடன் மலச்சிக்கலும் இருந்தால அது நீர்கட்டிக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மாதவிடாய் முடிந்த பின்னும் அடி வயிற்றில் வலி நீடித்தல்.


 
 சிறுநீர்ப்பையை  ஒட்டி நீர்க்கட்டிகள் தோன்றியிருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தொன்றுவதுடன். சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் ஏற்படும்.

கருப்பை வாய் அருகே நீர்க்கட்டிகள் தோன்றியிருந்தால் உறவின் போது கடுமையான வலி ஏற்படும்.

கட்டிகள் பெரிதாகும் போது இடுப்பின் பின் புறம் மற்றும் காலில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

மாதவிடாய் சுழற்ச்சி முறையாக இல்லாமல் அதிக வேறுபாடும், இடைவெளியுடன் இருத்தல்.

தற்போது அறிகுறிகள் குறித்து குறிப்பிட்டுள்ளோம். எதனால் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்

கட்டுரையாளர்: கண்மணி.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close