சுகப்பிரசவம் ஆகணுமா அப்ப இதை செய்யுங்க...

  தனலக்ஷ்மி   | Last Modified : 05 Jul, 2019 06:06 am
normal-delivery

பெண்கள் தாய்மை அடைந்ததும் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது உணவு விஷயத்தில் தான். மருத்துவர்களின் ஆலோசனையோடு   கட்டுப்பாடான உணவு வகைகள் எடுத்துக்கொண்டால் தாய் சேய் ஆரோக்யம் முழுமையாக இருக்கும். ஆரம்பம் முதலே சரியான முறையில் கடைப்பிடித்தால் சுகப்பிரசவம் எளிதாகும்.

உணவு விஷயத்தில் கட்டுபாடு என்று வலியுறுத்த காரணமே தற்போது உணவு விஷயத்தில் கலப்படம் என்ற காரணம் தான்.  தாயின் தொப்புள் கொடி வழியாகவே வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சத்துகள் சென்றடைவதால் கலப்படமிக்க உணவுப் பொருள்களினால் உண்டாகும் பாதிப்பு குழந்தையையும் அடைகிறது. இதனால் குழந்தைகளின் உறுப்பு வளர்ச்சியிலும் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.  எனவே குறைப்பிரசவம் மற்றும் சிசேரியனுக்கு சத்துக்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாகிறது.

ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளையும் ஆரோக்யமாக  பெற்றெடுக்கிறார்கள்.முதல் மூன்று காலங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களை உண்டாக்குகிறது. இதை வீட்டு பெரியவர்களின் அரவணைப்பில் எளிதா கவே கடந்து விடலாம். தற்போது பெண்கள் கருத்தரிப்பு காலங்களில் கருச்சிதைவு உண்டாகாமல் பார்த்துக்கொள்வதே முக்கியமாக பார்க்கப்படு கிறது.

கருத்தரித்த காலத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம், புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது நல்லது. கால்சியம் சத்துக்கள் தான் குழந்தையின் எலும்பில் வலுவை உண்டாக்கும் என்பதால் கருவின் தொடக்கத்தில் இதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

உடலில் போதிய சத்துக்கள் இல்லாவிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதால் சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. கால்சிய சத்து குறைவாக இருந்தால் குழந்தையின் எலும்பு வலுவிழந்து மென்மையாக இருக்கும். அதனால் கூடுமானவரை  கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரதச்சத்துக்கு பருப்பு வகைகள், பால், தயிர், பருப்பு வகைகளை ஒரு வேளை எடுத்துக்கொள்ள வேண்டும்.முளைகட்டிய தானிய வகைகள் தாய் சேய் இருவருக்கும் நல்லது.பால், பாதாம், ஆரஞ்சு பழச்சாறு, கேழ்வரகு, தயிர், அத்திப்பழம், பச்சைக்காய்கறிகள், மீன், ஓட்ஸ் போன்றவையும் உணவு தட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தையின் உறுப்புகள் வளரத்தொடங்கி குழந்தையின் அசைவுக்காலங்களில் வாந்தி சோர்வு மயக்கம் நீங்கி மாறாக நெஞ்சு எரிச்சல், செரிமா னக் கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை உண்டாக வாய்ப்புண்டு. மருத்துவர்களிடம் சென்றால் சத்து மாத்திரைகள் கொடுப்பார்கள். மாறாக கீரைவகைகள், உலர் பழங்கள், முளை கட்டிய தானியங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழச்சாறுகள்,சுண்டல்வகைகள் போன்றவை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மசாலாக்கள் நிறைந்த உணவு, செயற்கை குளிர்பானங்களை நிச்சயம் எடுக்க கூடாது. உப்பு மற்றும் சர்க்கரையை மிதமாக பயன்படுத்துவதும் நல்லது.

இலேசான நடைபயிற்சி, மனதை அமைதியாக்கும் மெல்லிசை, எப்போதும் புன்னகை, சத்து மிக்க உணவு இவை போதும் பிரசவத்தை சுகப்பிரச வமாக்க….


newstm

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close