சுய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயைக் கண்டறிதல்

  கண்மணி   | Last Modified : 07 Aug, 2019 10:28 am
diagnosis-of-breast-cancer-by-self-examination

மார்பகங்களில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட அதனை கவனிக்க வேண்டியது அவசியம். மார்பகங்களின் அளவுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது கட்டிகள், வீக்கங்கள் , புள்ளிகள், குழிவு போன்றவை தோன்றியிருந்தால் அவை மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்,. 

மாதவிடாய் ஆரம்பித்த 10 நாட்களுக்குள் மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா என கவனிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் சுய பரிசோதனை செய்வதன் மூலம் மார்பக புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே அறிந்து சரி செய்து விட முடியும்.

கண்ணாடி முன் நின்ற படி மார்பகத்தின் அளவில்  ஏதேனும் மாற்றம் , குழிவு, மரு, கட்டிகள், புள்ளிகள், சுருக்கம், மார்பக காம்பில் ஏதேனும் மாற்றம், விரிவு போன்றவை உள்ளதா என கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இரண்டு விரல்களையும் சேர்த்து வைத்தபடி அக்குள் பகுதியில் துவங்கி மார்பக கம்பு வரை அழுத்தி பார்க்க வேண்டும். இதன் மூலம் மார்பகத்திற்குள் ஏதேனும் கட்டிகள் இருந்தால் கண்டு பிடித்து விட முடியும்.

மார்பக காம்புகளை அழுத்தி நீர் அல்லது ரத்தம் கலந்த திரவம் வெளிப்படுகிறதா ,என்பதை கவனிக்க வேண்டும்.


 
கீழே படுத்தவாறு ஒரு தலையமனையை சோல்டருக்கு பின் புறம் வைக்கவேண்டும், பின்னர் கையை தலைக்கு  பின் புறம் வைத்து மறு  கையால் மார்பகத்தை நின்ற நிலையில் பரிசோதனை செய்தது போலவே, வட்டவடிவில் பரிசோதனை செய்ய வேண்டும். இரு புறமும் இதே முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் .

மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்கள் தென்படுவதாக தோன்றினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையும், பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close