அற்புத மருத்துவக்குணங்கள் நிறைந்த அத்திப்பழம்…

  தனலக்ஷ்மி   | Last Modified : 10 Aug, 2019 10:05 pm
article-about-athi-fruit

'காணாமல் பூ பூக்கும், கண்டு காய் காக்கும்' என்று அத்திப்பழத்தை வர்ணிப்பார்கள். நாட்டு அத்தி, வெள்ளை அத்தி  என்று இரண்டு வகைப்படும். வருடத்துக்கு இரண்டு  முறை அறுவடை செய்யப்படும். பழுத்த அத்திப்பழத்தில் உட்புறம் சிவப்பாக இருக்கும்.

50 கிராம் அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, வைட்டமின், கலோரி, மாங்கனீசு போன்றவை அடங்கியுள்ளது. எல்லா பழங்களையும் விட அத்திப்பழத்தில் 4 மடங்கு வரை தாது உப்புக்களும், சத்துக்களும், கால்சியமும், நார்ச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. 

இப்போதும் அத் திப்பழத்தை வாங்கி அத்திப்பழச்சாறாக்கி குடிப்பவர்கள் உண்டு. ஆனால் அத் திப்பழத்தில் அதிகளவு பூச்சிகள் நிறைந்திருக்கும். பத்து பழங்களில் இரண்டு பழங்கள் நன்றாக இருந்தாலே மிகப்பெரிய விஷயம். அத்திப்பழம் சொத்தைப் பழம் என்றழைக்கப்படுவது இதனால்தான்.

சித்தமருத்துவத்தில் அத்திக்காய், அத்திப்பழம், அத்திவேர், அத்திப்பட்டை, அத்திப்பால் அனைத்துமே பயன்படுத்தப்படுகிறது. அத்திப்பிஞ்சுகளைத்தான் கூட்டாக்கி சாப்பிடுகிறோம். அத்திப்பழம் விலை குறைவு என்பதால், சாலையோரக் கடைகளிலும் அத்திப்பழ ஜூஸ் விற்கப்படுகிறது. 

ஆனால் இதில் மெல்லிய புழுக்கள் இருப்பதால் கண்களுக்கு தெரியாது என்பதால் தரமான கடைகளில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் சாறை அருந்துவது நல்லது.

அத்திப்பழத்தை சுத்தம் செய்து பதப்படுத்தப்பட்டு உலர் அத்திப்பழங்கள் விற்பனைக்கு உள்ளது. 
இவற்றின் விலை சற்று அதிகம் என்றாலும் இதிலிருக்கும் சத்துக்கள் நமக்கு நோயை உண்டாக்காது. மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியத்தையும் உண்டாக்காது.

நார்ச்சத்துக்கள் குறைபாடு இருப்பவர்களுக்கு நிச்சயம் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும். இத்தகைய பிரச்னை இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் வேளைக்கு ஒன்றாக ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நார்ச்சத்து அதிகரித்து மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். 

இரத்த அழுத்த பிரச்னையை கட்டுக்குள் வைக்க உலர் அத்திப்பழம் முதன்மை மருந்தாக செயல்படுகிறது. அத்திப்பழத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாகவும் சோடி யம் அளவு குறைவாகவும் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் பிரச்னையை வராமல் காக்கிறது. 

பெண்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். அத்திப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் எலும்பின் உறுதியை அதிகரிக்கிறது. அடர்த்தியையும் கூட்டுகிறது.

குழந்தைகளுக்கு உலர் அத்திப்பழத்தை அப்படியே கொடுத்தால் சாப்பிடமாட் டார்கள். அதனால் பசும்பாலில் அத்திப்பழத்தை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து மில்க்  அத்தி ஷேக் போல் செய்து கொடுக்கலாம். உடலில் போதிய சத்துமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இரத்தமின்மையால் ஹீமோ குளொபின் குறைபாடு உண்டாகும். 

இவர்கள் தினமும் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்டமாதத்தில் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக உயர்ந்திருக்கும். உலர் அத்திப்பழத்தில் இரும்புச்சத்து 2 சதவீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. நீரிழிவு நோயாளிகளும் உலர் அத்திப்பழத்தைச் சாப்பிடுவது எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது.  இதில் நார்ச்சத்து  அதிகமிருப் பதால் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நல்லது.

அத்திகாயிலிருந்து வரும் பாலை வாய்ப்புண் இருப்பவர்கள் தடவினால் வாய்ப்புண் குணமாகும். இரத்த உற்பத்தியை அதிகரிப்பதிலும், தாதுக்களை பலப்படுத்துவதிலும், ஆண் மலட்டுத்தன்மை நீக்குவதிலும், பெண்களுக்கு வெள்ளைப் படுதலைப்போக்கவும் அத்திப்பழம் பயன்படுகிறது. 

கிரேக்கர்கள் அத்திப் பழத்தை இயற்கையான முறையில் பாலுணர்வு தூண்டும் பொருளாக பயன்படுத்தினார்கள். செரிமான பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அத்திப்பழம் சிறந்த நிவாரணமாக இருக்கும். இதிலிருக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்  புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும். 

விலை அதிகமாக இருந்தாலும் ஆரோக்யமானதாயிற்றே. அதனால் அதைப் பற்றி கவலைப்படாமல் வாங்கி சாப்பிடுங்கள்.. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close